தமிழ்நாட்டில் புதிதாக 47 பேருக்கு கரோனா பாதிப்பு உயிரிழப்பு ஏதும் இல்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 9, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 47 பேருக்கு கரோனா பாதிப்பு உயிரிழப்பு ஏதும் இல்லை

சென்னை,  மே 9 தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லாத நிலையில் நேற்று (8.5.2022) 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று மருத்துவத்துறை தெரிவித் துள்ளது. 

தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அதிகரிக்க தொடங்கி, 5ஆம் தேதி 58 பேருக்கும், 6ஆம் தேதி 64 பேருக்கும், 7ஆம் தேதி 89 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்தவகையில் நேற்று முன்தினத்தை விட பாதியாக குறைந்து நேற்று 47 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து கரோனாவுக்கு உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை நேற்று (8.5.2022) வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் நேற்று 16,881 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 47 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. 

இதையடுத்து வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனையில் 478 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிகிச்சை பெற்று வந்த 68 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழ் நாட்டில் கரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண் ணிக்கை 34,15,850 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இது வரை தமிழ்நாட்டில் கரோனாவுக்கு 38,025 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

மேலும், நேற்று அதிகபட்சமாக சென்னையில் 23 பேர், செங்கல்பட்டில் 10 பேர், கோவையில் 5 பேருக்கும், திருச்சியில் 3 பேர், சேலத்தில் 2 பேர், கடலூர், காஞ்சிபுரம், நாமக்கல், திரு வள்ளூரில் தலா ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மற்ற 29 மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லை. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment