சோழிங்கநல்லூர், மே 30 சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நேற்று (22.5.2022) காலை 10 மணிக்கு தொடங்கி இனிதே சிறப்பாக நடந்தேறியது.
மாநில திராவிடர் கழகப் பொருளாளர், வீ.குமரேசன் தலைமையில், சென்னை மண்டல தலைவர் பெரியார் பெருந்தொண்டர் தி.இரா.ரத்தினசாமி முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். இணைப்புரையை சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், வழங்கினார். மாநில பகுத்தறிவாளர் கழகம் அ.தா.சண்முக சுந்தரம், முன்னிலை வகித்து சிறப்புரையாற் றினார்.
சென்னை மண்டல தலைவரை தொடர்ந்து, மாவட்ட செயலாளர் பி.சி. ஜெயராமன், மாவட்ட அமைப்பாளர் குழ.செல்வராசு, மாவட்ட துணைச் செயலாளர் வி.பாண்டு, மாவட்ட மகளிரணித் தலைவர் ஜெ.தேவி, மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் த.அனுஷா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ம.சுமதி, தாம்பரம் மாவட்ட நகர தலைவர் சீ.லட்சுமிபதி, தாம்பரம் மாவட்ட நகர செயலாளர் மோகன்ராஜ் ஆகிய கழ கத்தின் நிர்வாகிகள், பெரியார் பிஞ்சுகள் யாழிசை பொற்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலந்துகொண்ட அனைத்துத் தோழர் களும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண் டனர். மற்றும் கழகத் தோழர்களும், பெரு வாரியாக ரா.சந்தோஷ்குமார், மா.சந்தோஷ் குமார், எஸ்.சண்முகம், ராஜேந்திரன், வி.ஆனந்தன், மா.இராசு, எஸ்.அருண்குமார், வி. மணிகண்டன், அ.எட்வின், ஜெ.குமார், ஜெ.ஜெயபிரபு, ம.விக்னேஸ்வரன், ஏ.விஜய், எம்.குருசாமி, பா.அறிவன், கே.ஆறுமுகம், எஸ்.ரங்கநாதன், மற்றும் பலர் திரளாக கலந்துகொண்டனர்.
கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரியார் பிஞ்சுகளுக்கு மாநில பொருளாளர் அவர்கள் பயனாடை அணி வித்தார். புதிதாக கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்ட தோழர்கள் மாநில பொருளாளர் அவர்களிடம் 'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' சந்தாக்களை வழங்கினர்.
புதிய பொறுப்புகள்
மாவட்ட புதிய பொறுப்பாளர்களாக செம்மஞ்சேரி ஆர்.சந்தோஷ் மாவட்ட இளைஞரணி செயலாளராகவும், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளராக போலச்சரி ஜெய பிரபு ஆகிய தோழர்கள் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.
தீர்மானங்கள்
தீர்மானம் 1: வருகிற ஜூன் 19 அன்று செஞ்சியில் நடைபெறும் மாநில பகுத்தறி வாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிப்பது.
தீர்மானம் 2: சென்னை ஹிந்தி எதிர்ப்பு மாநாடு, அரியலூர் செஞ்சி பகுத்தறிவாளர் கழக மாநில இளைஞரணி மாநாட்டில் மாவட்டக் கழகம் சார்பில் பெருவாரியான இளைஞர்களுடன் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீர்மானம் 3: சென்னை பெரியார் திடலில் 30.4.2022 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடை பெற்ற திராவிடர் கழக மாநில இளைஞரணி, திராவிடர் கழக மாநில மாணவர் கழகக் கலந் துரையாடல் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீர்மானம் 4: திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகத்தைப் பரவலாக்க தாம்பரம் மாவட்டத்துடன் இணைந்து செயல் படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீர்மானம் 5: நீட் எதிர்ப்பு, தேசிய புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு உள்ளிட்ட முழக்கங்களை முன்னிறுத்தி கோடை வெப்பம் மற்றும் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் பரப்புரை பயணம் மேற்கொண்டு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்திய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் இன்றைய கலந்துரை யாடல் கூட்டத்தின் வாயிலாக வாழ்த்து களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் மு.நித்தியானந்தம் நன்றியுரையாற்றினார்.
கலந்துரையாடல் கூட்டத்தின் இறுதி நிகழ்வாக, கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும், மதிய உணவு வழங்கப் பட்டது.
நன்கொடை
மாவட்ட மகளிரணிப் பொறுப்பளர் தேவி - சக்திவேல் இணையர் தங்களின் மணநாள் ஆண்டு விழா நினைவாக திருச்சி நாகம்மை குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500-அய் நன்கொடையாக வழங்கினர்.

No comments:
Post a Comment