சென்னை, மே 7 மக்களவையில் உறுப்பினர்களின் செயல்பாடுகளை ப்ரைம் பாயின்ட் ஃபவுண்டேஷன், கடந்த 12 ஆண்டுகளாக மதிப்பிட்டு வருகிறது. அந்த மதிப்பீட்டின்படி, ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவில் சிறப்பாகப் பணியாற்றிய மக்களவை உறுப்பினர்களுக்கு 'சன்சத் ரத்னா' விருது வழங்கி கவுரவிக்கிறது.
இந்த ஃபவுண்டேஷன் சார்பில் 17ஆவது மக்களவையில் உறுப்பி னர்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அதன் நிறுவனர் ப்ரைம் சீனிவாசன் கூறி யதாவது: மக்களவையின் செயல் பாடுகளை பிஆர்எஸ் இந்தியா என்ற அமைப்பு ஆராய்ச்சி செய்து வரு கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யில் மொத்தம் 40 மக்களவை உறுப் பினர்கள் உள்ளனர். கடந்த ஜூன் 2019 முதல் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரை 40 உறுப் பினர்களது செயல்பாடுகள் மதிப் பிடப் பட்டுள்ளன.
அதன்படி, தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்களில் தருமபுரி தி.மு.க. உறுப்பினர் எஸ்.செந்தில்குமார் 386 புள்ளி களுடன் தமிழ்நாடு அளவில் முதலிடத்திலும், தேசிய அளவில் 18ஆவது இடத்திலும் உள்ளார். தொடர்ந்து முயற்சித்தால் முதலிடம் பிடித்து, சன்சத் ரத்னா விருது பெற முடியும்.
தென்காசி தி.மு.க. மக்களவை உறுப்பினர் தனுஷ்குமார் 348 புள்ளிகளுடன் தமிழ்நாடு அளவில் 2ஆம் இடத்திலும், தேசிய அளவில் 31ஆவது இடத்திலும் உள்ளார். தமிழ்நாடு அளவில் செந்தில்குமார் 322 கேள்விகளை எழுப்பி முதல் இடத்திலும், தனுஷ்குமார் 317 கேள் விகள் எழுப்பி 2ஆம் இடத்திலும் உள்ளனர். இருவருமே 99% அமர்வு களில் பங்கேற்றுள்ளனர்.
தேசிய அளவில் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த, தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சுப்ரியா சுலே 569 புள்ளிகளுடன் முதலி டத்தில் உள்ளார்.
தேனி அ.தி.மு.க. உறுப்பினர் ரவீந்திரநாத் 84 சுய முயற்சி விவாதங்களில் பங்கேற்று, தமிழ்நாடு அளவில் முதலிடத்தில் உள்ளார். இவர் தேசிய அளவில் ஒட்டுமொத்த மதிப்பீட்டின்படி 205 புள்ளிகள் பெற்றுள்ளார்.
65 சதவீத அமர்வுகளில் பங் கேற்றுள்ளார். சிதம்பரம் தொகுதி உறுப்பினர் திருமாவளவன் 6 தனி நபர் மசோ தாக்களை அறிமுகம் செய்து, தமிழ் நாட்டில் முதலிடம் பிடித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment