சிவகங்கை மாவட்டத்தில் சமத்துவபுரம் கட்டுமானப் பணிகள் ஊராட்சித்துறை இயக்குநர் ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 12, 2022

சிவகங்கை மாவட்டத்தில் சமத்துவபுரம் கட்டுமானப் பணிகள் ஊராட்சித்துறை இயக்குநர் ஆய்வு

சிவகங்கை, மே 11- சிவகங்கை மாவட்டம், சிங்கம் புணரி அருகே கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணி களை ஊராட்சித்துறை இயக்குநர் பிரவீன் நாயர், ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகி யோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  பின்னர் அவர்கள் கூறுகையில்,  ‘‘சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட கண்ணமங்கலம்பட்டி ஊராட்சியில் உள்ள கோட்டைவேங்கைப்பட்டி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை  சார்பில் புதிதாக 100 வீடுகள் கட்டப்பட்டுள்  ளன. பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, விளையாட்டுத்திடல் போன்ற  அடிப்படை வசதிகளுடன் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.  இங்கு முதியவர் மற்றும் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், அங்கன்வாடி மய்யம், அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்காக பொது வினியோக கடை, விளையாட்டுத்திடல், வீடுதோறும் காய்கறி  தோட்டங்கள் அமைத்தல், மரக்கன்றுகளை வளர்த்தல் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தனர்.  


No comments:

Post a Comment