தேவை - தேவை -சமூகநீதி தேவை - தேவை! பெரியார் பெயரில் பல்கலைக்கழகம் - பெருமளவில் ஜாதி ஆதிக்கம் தொடருவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 11, 2022

தேவை - தேவை -சமூகநீதி தேவை - தேவை! பெரியார் பெயரில் பல்கலைக்கழகம் - பெருமளவில் ஜாதி ஆதிக்கம் தொடருவதா?

பெரியாரை அவமதிக்காதே - ஜாதி ஆதிக்கத்தை வளர்க்காதே!


சேலம், மே 11-  சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் ஜாதிய ஆதிக்கத்தையும், வளர்ந்து வரும் ஜாதி உணர்வையும் கண்டித்து இன்று காலை 10 மணி அளவில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் எழுச்சி யுடன் நடைபெற்றது. ஏராளமானவர்களும், பொது மக்களும் ஏற்று முழக்கங்களை எழுப்பினர்.

சமூக நீதி இல்லாத சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தை கண்டித்து திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. 

இன்று (11.5.2022) காலை 10 மணி அளவில் சமூக நீதியை கடைப்பிடிக்காத ஜாதி ஆதிக்கத்திற்கு துணைபோகும் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் சமூக நீதி இல்லாததைக் கண்டித்து திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா. செந்தூரப் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. 

அனைவரையும் வரவேற்று திராவிட மாணவர் கழக சேலம் மண்டல செயலாளர்  திராவிட முருகன் உரையாற்றினார்.

மண்டல திராவிடர் கழகத்தினுடைய கவிஞர் சிந்தாமணியூர் சி.சுப்ரமணியம், மண்டல திராவிடர் கழக செயலாளர் விடுதலை சந்திரன் , திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் கவி பாரதி , சேலம் மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் அ.பாஸ்கரன், ஆத்தூர் மாவட்ட மாணவர் கழக தலைவர் பா.அழகுவேல், ஆத்தூர் மாவட்ட அமைப்பாளர் இரா.அகஸ்டின்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பெரியார் பல்கலைக் கழகத்தின் மோசடிகளை விளக்கி பொதுக்குழு உறுப்பினர்  பழனி.புள்ளையண்ணன்  தொடக்க உரையாற்றினார்.

மாநில அமைப்புச் செயலாளர்  ஊமை. ஜெயராமன்,   மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் ஆகியோர் உரையினைத் தொடர்ந்து  இறுதியில் திராவிடர் கழக கிராம பகுத்தறிவுப் பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் சிறப்புரையாற்றினார்

ஆத்தூர் மாவட்ட  மாணவர் கழக  அமைப்பாளர் ஜான்சி ராணி நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மேட்டூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி,  மாவட்ட செயலாளர் கா.நா. பாலு, ஆத்தூர் மாவட்ட செயலாளர் நீ.சேகர், சேலம் மாவட்ட தலைவர் கே ஜவகர்,  சேலம் மாவட்ட செயலாளர் அ.ச. இளவழகன், மாவட்ட இணைச் செயலாளர் வீரமணி ராஜூ,  சேலம் மாநகர தலைவர் அரங்க இளவரசன், மாநகர செயலாளர் பா. வைரம்,  மாவட்ட துணை செயலாளர் இராவண பூபதி,  கோவி. அன்புமதி, ஓசூர் மாவட்ட தலைவர் சுவன வேந்தன் ,கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கா. மாணிக்கம்,  தருமபுரி மேனாள் மாவட்ட தலைவர் சிவாஜி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தருமபுரி செல்லத்துரை,  பொதுக்குழு உறுப்பினர் ஓமலூர் சவுந்தரராஜன் மேட்டூர் சந்திரசேகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் கென்னடி,  தருமபுரி மாவட்ட  அமைப்பாளர் காமராஜர், தருமபுரி இளைஞரணி செயலாளர் மு.சிறீதரன், தருமபுரி வாசகர் வட்டத்தலைவர் க.சின்னராஜ், இளைஞரணி துணைத்தலைவர் கண்.இராமச்சந்திரன், இளைஞரணியைச் சேர்ந்த கணேசமூர்த்தி,  அஜித், சுரேஷ், அசோக்குமார்,  வினோத், சக்திவேல், வினோத்குமார், மாணவர் கழகத்தைச் சேர்ந்த சச்சின்,  சரவணன், தொழிலாளரணி ஊமை.காந்தி,  ஊற்றங்கரை சிவராஜ், தருமபுரி சம்பத்குமார், பெரியார் பல்கலைக் கழக மாணவர்கள் இசைச்செல்வி , கவுரி,  மலர்விழி,  அபிநயா,  அருண்,  மணிகண்டன், மனோஸ், தமிழ்வாணன், பிரவீன், பிரி யங்கா, அசய், சவுந்தரராசன், விமல்,அஸ்வின்,தஞ்சை மண்டல மாணவர்கழக செயலாளர் ச.சற்குணன்,  பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர்கள் நிலவன், சிந்தனை, தஞ்சை விடுதலையரசி, சேலம் அபினே சுகுமார், சதிசுகுமார், ஆத்தூர் சுரேஷ்,  உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று முழக்கமிட்டனர்.


No comments:

Post a Comment