சென்னை, மே 11- நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் 2022--2023 கல்வி ஆண்டு முதல் இள நிலை, முதுநிலை படிப்புகளில் சேர்வ தற்கு பொது நுழைவுத் தேர்வு (சியுஇடி) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டுக்கான சியு இடி தேர்வு ஜூலை முதல் வாரத்தில் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) மூலம் தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் கணினி வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்.7-இல் தொடங்கி மே 6-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதுவரை இத்தேர்வுக்கு 7 லட்சத்துக்கும் மேற்பட் டோர் விண்ணப்பித்துள்ளனர்.
தற்போது இத்தேர்வுக்கு விண் ணப்பிக்கும் அவகாசம் மே 22ஆ-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவ ரங்களை https://nta.ac.in இணைய தளத்தில் அறியலாம்.
No comments:
Post a Comment