சென்னை, மே 8 சென்னை சைதாப்பேட்டையில் ஆளுநரைக் கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நேற்று (7.5.2022) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சைதாப்பேட்டையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் நேற்று (7.5.2022) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் சென்னை மண்டல தலைவர் பக்கீர் முகம்மது தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் முகம்மது ஷேக் அன்சாரி கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பட்டத்தைத் தொடர்ந்து முகம்மது ஷேக் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும், சமூக சேவைகள், அரசியல் உள்ளிட்ட முகமூடிகளை அணிந்து இந்தியாவை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதாகவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி யில் பேசியுள்ளார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, அரசமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு செயல்படக்கூடிய அமைப்பாகும்.
எங்கள் அமைப்பின் மீது ஆளுநர் கூறிய குற்றச்சாட்டுகள் ஆபத்தானவை. அவர் தனது பதவிக்கு அருகதையற்ற பேச்சை பேசியுள்ளார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தமது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. ஆளுநர் தனது பேச்சை திரும்பப்பெற வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா எந்த ஒரு பயங்கரவாத செயலிலும் ஈடுபடவில்லை. ஆளுநர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து வருகிறோம். இந்த விவகாரத்தில் பல்வேறு இயக்கங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்தபோதிலும், முதல மைச்சர் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்களுக்கு ஒன்றிய அரசு துரோகம் இழைக்கிறது - எரிவாயு விலை உயர்வுக்கு முத்தரசன் கண்டனம்
சென்னை, மே 8 சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: சமையல் எரிவாயு உருளையின் விலை மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட முறை விலை உயர்த்தப்பட்டு தற்போது ஒரு எரிவாயு உருளை பெற ரூ.1050 வரை செலவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்வதைத் தொடர்ந்து உணவுப் பொருள்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து வருகின்றன.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் ஒன்றிய பாஜக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு உதவும் ஒன்றிய அரசு விலை உயர்வை எதிர்கொள்ள முடியாத வாழ்க்கை நெருக் கடிக்கு ஆளாகி வரும் மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. ஒரு கண்ணுக்கு வெண்ணெய்யும் மறுகண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்கும் ஒன்றிய அரசின் வஞ்சக நடவடிக் கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டிக்கிறது. சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment