சென்னை, மே 8 திமுக அரசின் ஓராண்டு சாதனைக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாளில் இருந்து ஒவ்வெரு நாளும் தமிழ்ச் சமுதாயத்துக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற தீவிர முனைப்பின் காரணமாக அவர் செயல்பட்டதால் மக்களின் நன்மதிப்பை பெற்றிருக் கிறார். இதை பெற, ஓய்வறியாமல் உழைத்திருக்கிறார். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் பயணம் செய்கிறது என்று சென்னால் அதற்கு முதலமைச்சரின் கடுமையான உழைப்பு தான் காரணம். 10 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டிய சாதனை களை ஓராண்டில் நிகழ்த்திக் காட்டியுள்ளார். தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று தலை நிமிர்ந்த தமிழ்நாடாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் இரா.முத்தரசன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சீரிய தலை மையில் அமைந்த அரசு ஓராண்டை நிறைவு செய்து, 2ஆவது ஆண்டில் வீறுநடை போட்டு வருகிறது. வேலைவாய்ப்பு, ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட விரிவாக்கம், பழைய ஓய்வூதிய திட்டம், போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கைகள் உள்ளிட்ட தொழிலாளர் நலன் பேணும் நடவடிக்கைகள் போன்றவற்றிலும் இந்த அரசு சாதனை படைக்கும் என்ற நம்பிக்கை இழையோடி நிற்கிறது.அரசு பல்லாண்டு தொடர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment