தமிழர் தலைவரின் பெரும் பரப்புரைப் பயணம் தொடர்கிறது
முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
நேற்றைய முன்தினத் (6.5.2022)தொடர்ச்சி...
ஈரோட்டில் நீட்டும், புதிய கல்விக் கெள்கை எவ்வாறு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, மனித உரிமைக்கு எதிரானது என்பதை எடுத்துச் சொன்னார். இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தம் 21ஏ சட்டத் திருத்தம்"The state shall provid free and compuls education to all children of the age 6 to 14 years in such a manner as to state away by law determine" என உள்ளதைப் படித்துக் காண்பித்தவர், இது திருத்தப் பெற்றது மன் மோகன் சிங் தலைமையிலான யுபிஏ அரசால், கலைஞர் அதில் பங்கேற்றிருந்தார் என்பதையும், கல்விக்கு இவ் வளவு அரிய பொறுப்புடைய சட்டத் திருத்தம் வருவதற்கு திராவிட இயக்கம் காரணமாக இருந்தது என்பதையும் எடுத்துக் கூறினார்.
இவ்வாறெல்லாம் கல்விக்குச் செய்திருக்கையில், இப்போது மோடி அரசு படிக்கக் கூடாது என்பதற்காக ஒரு நஞ்சுக் கல்வித் திட்டம் தனைக் கொணர்கிறார்கள் என்பதைக் கூறி, "இந்தத் திட்டம் சட்டத் திருத்தம் 21ஏஇன் படி சட்ட விரோதமல்லவா" என்று வினா எழுப்பி பிள்ளைகள் எதிர்காலம் மோடி அரசின் திட்டத் தால் இருண்டுவிடும் என எச்சரித்து உரையாற்றினார். இதே நாளில் அடுத்த பரப்புரைக் கூட்ட நிகழ்வு நடை பெற்ற ஊர் கரூர் ஆகும். கரூரில் குமரன் சலை அருகில் நடைபெற்றது.
மனுதர்மத்தின் கொடுமை
கரூரில் மனுதர்மத்தின் கொடுமைதனை மக்களிடம் எடுத்துக் காட்டியவர், மற்றொரு முதன்மையான செய்தியைத் தொட்டுக் காட்டினார். அது அவர்களின் அறிவு நாணயத்தைச் சுட்டிக் காட்டியது ஆகும். "அன் றைக்குச் சமஸ்கிருதம் எல்லோரும் படிக்க முடியாது" என வலியுறுத்தினர். அன்று சமஸ்கிருதம், இன்று நீட் என ஒப்பிட்டுக் காட்டினார். கல்வியும் மருத்துவமும் மனிதருக்கு அடிப்படை. - அதைச் சிதைக்க எண்ணு கிறார்கள் என்று வரும் ஆபத்தைக் கூறினார்.
கரூரில் பரப்புரை என்பதால் திராவிடர் கழகத் தோழர் களின் சிறப்பைக் கூறுகையில், கரூர் கலவர வழக்கு என அன்றைய நாளில் பிரபலமாயிருந்த நிகழ்வைச் சுட்டிக் காட்டிக் "கரூர் வீரண்ணன் எனும் முரட்டுத் தோழர் போன்ற வீரர்களால் ஆச்சாரியார் பதவி விலகினார்" என்பதை எடுத்துக் காட்டினார். அனைவருக்கும் அனைத்தும் எனச் செயல்படும் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசைப் பற்றிப் பாராட்டிக் கூறினார்.
20.4.2022 அன்று பரமத்தி வேலூரிலும், சேலத்திலும் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. நாகர் கோவிலில் தொடங்கிய பரப்புரைப் பயணம் நிறைவு நாளை நெருங்க, நெருங்கச் சூடு பிடித்தது எனலாம். அதுவும் 30.4.2022 அன்று தார்ச் சட்டி ஏந்தப் போவதாக அறிவித்த அறிவிப்பிற்குப் பின் பரபரப்புக்குப் பஞ்சமில்லை.
20.4.2022 அன்று பரமத்திவேலூரில் முதல் கூட்டம் அண்ணா, காமராசர் சிலைகளின் முன்பு பெரியவர் பொத்தனூர் க.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
பரமத்திவேலூருக்கும் பழைய வரலாறு இருப்பதைத் தமிழர் தலைவர் சொல்லில் வடித்துக் காட்டியபோது அவர்தம் நினைவாற்றல் மட்டுமல்லாது பொருத்தமான உரை பொருத்தமான இடத்தில் பொருத்திக் கூறுவதுதான் வியப்பு.
"100 ஆண்டுகளுக்கு முன்னால் மனுதர்ம ஆட்சி நடந்தது. அப்போதுநமது நிலை என்ன?" எனக் கேள்வி கேட்டுத், "துணி வெளுக்கிறவன் பிள்ளை துணி வெளுக் கணும். கூட்டறவன் பிள்ளை கூட்டணும், பார்ப்பான் மட்டும்தானே படிக்கணும். இப்படித் தானே இருந்தது? இதை மாறறியது யார்? எனக் கேள்வி கேட்டு, இடைவெளித் தந்து "திராவிடர் இயக்கம் தானே?" என மற்றொரு வினாவைப் பதிலாக்கினார்.
அவர் "அந்தக் கருப்புச் சட்டை செய்த தியாகத்தில் தானே மாறுதல் வந்தது, அண்ணா வந்தார், கலைஞர் வந்தார், தளபதி வந்தார், தலைமுறை தலைமுறையாக அதுதானே?" என்று மக்களிடம் வினா எழுப்பக் கைதட் டல்களே பதிலாய் ‘ஆம்! ஆம்! ஆம்‘ என்று வந்தன.
உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம்
நீட் பிரச்சினை, புதிய கல்விக் கொள்கை எல்லாம் "கட்சிப் பிரச்சினைகள் இல்லை. சமயப் பிரச்சினைகள் இல்லை. ஜாதிப் பிரச்சினைகள் இல்லை. உங்கள் பிள் ளைகளின் எதிர்காலப் பிரச்சினை. ஆகவே விழிப் புணர்வு நீங்கள் பெற வேண்டும்" எனக் கூட்டத்தவர் இதயத்தைத் தொட்டு உரையை நிறைவு செய்து சேலம் புறப்பட்டார்.
பரமத்திவேலூர் பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து சேலத்தில் கோட்டை திடலில் நடைபெற்றது. 1944இல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாகப் பேரறிஞர் அண்ணாவின் தீர்மானத்தால் விளைந்த ஊர். நமக்குச் சேலத்து மாங்கனியை விடச் சேலத்து இருப்பை விட 1971 தேர்தலில் இராமன் உருவத்தைச் செருப்பால் அடித்தனர் என்று கூறித் திமுகவைத் தோற்கடிக்கச் செய்யச் செய்த ..... முயற்சிகள் தான் நினைவில் வந்து நிற்கின்றன. சேலம் என்றால் அண்ணாதுரை தீர்மானம்தான் முதல். நமக்குச் சேலம் என்றால் புதுப்புனல் நீராடல் சுகம் போல உற்சாகம் தொற்றிக் கொள்கிறது என்றால் தமிழர் தலைவருக்குச் சும்மாவா? "சேலத்திற்கு வரும் போதெல்லாம் நாங்கள் ஒரு புது உற்சாகத்தைப் பெறுகிறோம்" என மகிழ்ச்சிப் பெருக்குடன் உரை நிகழ்த்தியவர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், நம் சேலத்தைப் பற்றிச் செல்லும் போது ‘இது என் தாய் வீடு‘ என்பது போல் சொல்வார்கள் என்று மேற்கோள் காட்டினார்.
உண்மையாகச் சொல்லப்போனால் தந்தை பெரியா ரின் மாமனார் வீடு அன்னை தோழர் நாகம்மையார் பிறந்த மண். ‘பெரியாரின் முதல் தளபதி அறிஞர் அண்ணா சேலம் செயலாற்றும் காலம் எனக் கட்டுரை தீட்டியதை யும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் சேலத்தில் இங்கே தான் தன் நண்பர்களுடன் தங்கியிருந்ததையும் நினைவு கூர்ந்தார் எனும் போது - கட்டுரையாளர் தன் ஆசிரியப் பணிக்குச் சேலம் அரசுக் கல்லூரியில் கால்கோளிட்டதும் நினைவில் நிழலாடியது.
"கொளுத்தும் வெயிலா? கொடிய மழையா அது முக்கியமல்ல, தோழர்களே டில்லிப் பட்டண வெப்பம் இதைவிட அதிகமாக இருக்கிறதே. நமது பிள்ளைச் செல்வங்களைப் பாதுகாக்க வேண்டாமா? அதற்கு தான் இந்தப் பரப்புரை, விழிகளில் வெளிச்சம் பரவட்டும் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
21.4.2022 அன்று ஒசூர் தருமபுரியில் நடைபெற்ற பரப்புரைப் பயணப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் சிறப்புரை ஆற்ற வந்தவர் ஒசூரில் சுயமரியாதைச் சுடரொளி துக்காராம் நினைவு மேடையில் முதலில் சொற்பொழிவு ஆற்றினார். அதற்கு முன் ஒசூர் மாவட்டக் கழகக் காப்பாளர் துக்காராம் இல்லம் சென்று குடும்பத் தினருக்கு இரங்கல் தெரிவித்து வந்தவர் மறைந்த தோழர் துக்காராம் இயற்கை எய்தியதைச் சுட்டிக் காட்டிக் "கருப்புச் சட்டைக்காரர் ஒருவரின் இழப்பு என்பது ஒரு சமூக விஞ்ஞானியை இழப்பது போன்றது. ஆகவே அவருக்கு அனைவர் முன்னிலையில் வீரவணக்கம் செலுத்தியது அனைவரையும் நெகிழச் செய்தது. படிக் காதே என்று சொல்வதற்கு ஒரு புதிய கல்விக் கொள்கை யாக, "சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே" என்று மனுதர்மம் சொல்வதைச் சுட்டிக் காட்டி பார்ப்பான் மட்டும் படிக்கணும் என்பதை எல்லாம் எடுத்துக் கூறியது கேட்போருக்குச் சுருக்கென்று தைத்தது.
"எங்கள் மீது புகார் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ. க.வைச் சேர்ந்தவர்களே, உங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்துத்தான் பேசுகிறோம். இந்தச் சட்டங்கள் தொடர்ந்தால் உங்கள் பிள்ளைகளுக்கும் கல்விக்குள்ளேயே நுழைய முடியாத நிலை வரும் என்று சங்கிகளுக்குத் தைக்கும்படி கூறினார்.
"உங்களுக்காக என் உயிர் போனால், உங்களுக்காக என் வாழ்க்கை முடிந்தால், உங்கள் பிள்ளைகளின் எதிர் காலத்துக்காக பயன்பட்டால் மகிழ்வேன்" என தம் உயிருக்கு ஆபத்து விளைவிக்க பலமுறை முயற்சி நடந் ததைச் சுட்டிக் கூறி முடித்தார்.
தருமபுரியில் உரையாற்றுகையில், "காமராசர் ஆட் சியில் மாவட்டத் தலைநகர் தருமபுரியா? கிருஷ்ணகிரியா? என்ற தடுமாற்றம் வந்தபோது, பெரியார் - தோழர்களிடம் ஆலோசனை கேட்டுத் தருமபுரியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று விடுதலையில் தலையங்கம் எழுதச் சொன்னார். எழுதினோம். அதைப் பார்த்த காமராசர் பெரியார் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் எனத் தருமபுரியைத் தேர்ந்தெடுத்தார் எனும் வரலாற்றுத் தகவலைச் சொன்னார்.
"உங்கள் பயணத்தின் சலங்கை ஒலி சரித்திரத்தின் மூலையெல்லாம் சதுராடிப் பறையடிக்கும் - சந்திரனும் இறங்கி வந்து கை கொடுக்கும் சந்தனத்தை மார்பில் பூசும் வீரமணி பெயரோ வீடுதோறும் ஒரு பிள்ளைக்குத் தட்டாமல் சூட்டப்படும் - தாலாட்டுப் பாடலிலும் இடம் பெறும்"
என்று கவிஞர் கலி.பூங்குன்றன் (23.4.2022 உலகப் புத் தக நாள் அவை) வாழ்த்திப் பாடிய பாடல் வரிகளுக்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் எனக்கும் நினைவு தெரிந்த நாள் முதல் வென்றெடுத்த அன்னை மீனாட்சி நினைவில்லை, என்னை வளர்த்தெடுத்த அன்னை மணியம்மையாரே நினைவில் நிற்கிறார் என்று ஆசிரியர் உரைத்திட்ட அன்னை மணியம்மையார் பிறந்த வேலூர் மண்ணில் அன்னையாரின் நூறாம் ஆண்டுப் பிறந்த நாளைச் சீரும் சிறப்புமாகக் கொண்டா டிய வேலூர் திருப்பத்தூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் 22.4.2022 அன்று திருப்பத்தூர், வேலூரில் பரப்புரைகள் நடைபெற்றன.
திருப்பத்தூரில் தமிழர் தலைவருக்கு வேறு எங்கும் இந்தப் பயணத்தில் நடைபெற்றிராத இருசக்கர வாகனப் பேரணி, பறை இசை எழுச்சியுடன் சீர்மிகு வரவேற்பு அளித்தனர். அதனால் அதை உணர்ந்து எடுத்த எடுப்பிலேயே இங்கே சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றே தம் உரையைத் தொடங்கினார். இந்தப் பகுதியில் தவிர்க்க முடியாத பெரியார் பெருந்தொண்டர் ஏ.டி.கோபால் அவர்களின் நூற்றாண்டு விழா இன்னும் சில மாதங்களில் வரவிருப்பதால் நான் நிச்சயம் கலந்து கொள்வேன் என்றார். ஏற்பாடுகளின் சிறப்பைக் குறிப்பிட்டுச் பேசிக் கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது. இதை விட்டுப் போவதற்கு எனக்கு மனமில்லை. ஆனால் கடிகாரம் என்னை நெருக்குகிறது என்றாலும் இது அரசியல் பயணம் அல்ல, பா.ஜ. கட்சியினருக்கும் சேர்த்துப் போராடிய ஒரு பயணம் என்று தன்னை எதிர்ப்பவர்களுக்கும் சேர்த்துச் சொன்ன தோடு மேடையிலேயே செய்தியாளர்களைச் சந்தித்து விட்டுப் புரட்சித்தாய் அன் னையார் பிறந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
திருப்பத்தூரிலிருந்து புறப்பட்டு வந்து வேலூர் சேரவே மணி 9.15 ஆகி விட்டது. கூட்டம் நிறைவு செய்ய வேண்டிய நேரமோ 10.00 மணி. இந்த விதியை மீறாத தலைவர்.
"தந்தை பெரியாரை 95 வயது வரையில் வாழ வைத்து இந்த இயக்கத்துக்கு 5 ஆண்டுகள் தலைவராக இருந்து சாதனை செய்த அன்னை மணியம்மையார் பிறந்த மண் இந்த மண்" எனக் கூறினார். யாராக இருந்தாலும் அரசி யல் சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் தான் என் பதை ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தினார். ஹிந்தியைத் திணிக்கத் துடிக்கும் அமித்ஷாவைக் கண்டித்தார். அனைவருக்கும் அனைத்தும் எனும் தந்தை பெரியாரின் தனித்துவத்தை எடுத்துக் கூறினார். நீட் தேர்வின் அவலங்களை அரியலூர் அனிதாவை நினைவுபடுத் தினார்.
ஒரு வினா? நாங்கள் மேற்கொண்டிருக்கும் பெரும் பயணத்தால் தமிழ்நாட்டிற்கு நீட்டிலிருந்து விலக்குக் கிடைத்துவிடுமா?
விழித்தால் விடியும்
தமிழர் தலைவரின் பதில் "என்னால் நம்மால் முடி கிறதோ இல்லையோ மக்கள் எழுச்சியால் எதுவும் செய்ய முடியும். இது ஒரு விழிப்புணர்வு பயணம் - தூங்கியவர் விழித்தால் விடிவது உறுதி.
23.4.2022 தமிழர் தலைவரின் பெரும் பரப்புரைப் பயணம் திருத்தணி கமலா திரையரங்கம் முன்பு நடை பெற்றது.
"இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்னுடைய வேலையைச் சுலபமாக்கி இருக்கிறார். கருத்துகள் முக்கியம் - அதை யார் சொன்னாலும் சரி, உங்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்பதுதான் முக்கியம்" என்று தொடங்கினார். புதிய கல்வித் திட்டம் கண்ணி வெடி என்பதையும் இதனால் பயடைவோர் அதானி அம்பானி தான் எனவும் எச்சரித்தார்.
அரக்கோணத்தில் பேண்டு வாத்தியம் தீப்பந்தங் களுடன் கூடிய சிலம்பாட்டம் ஆடி மிகச் சிறப்பாக வரவேற்று, எழுச்சிகரமான ஒலி முழக்கங்களுடன் தமிழர் தலைவர் ஆசிரியரை வரவேற்றனர்.
"நீண்ட நெடிய பயணத்தில் ஏற்பட்டிருக்கும் வலிகள் உங்களைப் பார்த்தவுடன் நீங்கள் அறிந்திருக்கும் வர வேற்பைக் கண்டதும் அந்த வலிகளெல்லாம் காணாமல் போய்விட்டன" என்றே தம் உரையைத் தொடங்கினார். "கல்வி மூளைக்கு - சுகாதாரம் உடலுக்கு, இந்த இரண் டையும் கொடுப்பதுதான் திராவிட மாடல்" எனத் தெளிவுபடுத்தினார்.
102 ஆண்டுக்கால வரலாற்றில் திராவிட இயக்கத்தினர் கல்விக்குக் கை கொடுத்த தன்மையை விவரித்தார். தமிழையும் கோயிலுக்குள் விடவில்லை, தமிழனையும் கோயிலுக்குள் விடவில்லை. அதை மாற்றிக் காட்டியது திராவிட இயக்கம். இதுதான் திராவிட மாடல் என்று கூறி, அரியலூர் அனிதா கண்ட மருத்துவக் கனவை உருக்கத் துடன் சொல்லி அவ்வளவு எளிமையான குடும்பத்திலி ருந்து வந்தவர்களும் மருத்துவர் ஆகக் கூடிய திராவிட மாடலைத் தெளிவாகச் சொன்னார்.
நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்புப் பரப்புரைப் பெரும் பயணம். 21 நாட்கள், 38 மாவட்டங்கள் 2 மாநிலங்கள், 40 கூட்டங்கள் 4700 கி.மீ. பயணத்தின் பின் அரக்கோணத்தில் நிறைவுற்றது. சென்னை வந்து சேர்கையில் நள்ளிரவு இரண்டு மணி.
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ள குளிர் தரும் தரு நிழல் இல்லை, கொளுத்தும் கோடை தான் இருந்தது. அந்தக் கோடையிலும் திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் நாகர் கோயிலில் தொடங்கித் தலைநகர் சென்னை வரை பிரச்சாரப் பெரும் பயணம் 23.4.2022 இரவோடு அரக்கோணத்தில் நிறைவு பெற்றது. இதற்கு முன் இருந்த பிரச்சாரப் பயணத்தை விட இது மாறு பாடானது.
ஆயினும் எம்.ஜி.ஆரை-வருமான வரி ஆணையைச் சுருட்டிக் கொள்ள - செய்தது போல், 69 விழுக்காடு இடங்களை இந்தியப் பெருநாட்டிலேயே அரசியல் சட்ட ஒன்பதாவது அட்டவணைச் சிமிழுக்குள் அடைக்கச் செய்த பயணம் போல் நாளொன்றுக்கு 225 கி.மீ. பயணம் எனும் முறையில் 4700 கி.மீ. பயணமும் கவிஞர் சுட்டிக் காட்டியது போல் வீண் போகாது. வெற்றி வாகை சூடும் என்பது நீர்மேல் எழுத்தல்ல - கல்மேல் எழுத்து.

No comments:
Post a Comment