மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் சித்தாம்பூர் பெரியார்தொண்டர் மறைந்த சபா.தியாகராஜன் அவர்களின் துணைவியாரும் ஒன்றிய துணைச்செயலாளர் தி.சபாபதியின் தாயாருமான ஜனகம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி மாவட்ட தலைவர் ஆ.ச.குணசேகரன் தலைமையில் மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் முன்னிலையில் 4.4.2022 அன்று காலை நடைபெற்றது. திமுக மாநில தேர்தல் பணிக்குழுச் செயலாளர் குத்தாலம் பி.கல்யாணம் படத்தினை திறந்து வைத்தார். ஒன்றிய தலைவர் சா.முருகையன், செயலாளர் கு.இளமாறன், மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், துணைச்செயலாளர் அரங்க.நாகரத்தினம், நகர தலைவர் சீனி.முத்து, துணைத்தலைவர் பூ.சி.காமராஜ் , கு.இளஞ்செழியன், ஆசிரியரணி தோழர் எம்.என் செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஒன்றிய துணைச்செயலாளர் தி.சபாபதி மாவட்ட செயலாளரிடம் விடுதலை வளர்ச்சி நிதியாக 500 ரூபாய் அளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment