சட்டப்பேரவையில் - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!
சென்னை, மே 9- சட்டப் பேரவையில் 6.5.2022 அன்று கேள்வி நேரத்தின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரையில் குறிப்பிட்டதாவது, தருமபுரி மாவட்டம் வளமான ஆறு களால் வளர்க்கப்படுகிற மாவட்டம் அல்ல. அம் மாவட்டத்தின் பெரும் பகுதியில் புஞ்சை நிலங்கள் தான் இருக்கின்றன. வளைந்து, வளைந்து ஓடுகிற ஆறுகள், அவற்றினால் வளர்க்கப்படுகிற நெல் வயல்கள், எங்கு பார்த்தாலும் சோலைகள், கரும்பு, வாழை போன்ற பணப் பயிர்களைப் பயிரிடுகிற பூமி அல்ல. வேர்க் கடலை, மொச்சைக் கொட்டை, காராமணி போன்றவைதான் அந்தப் பகுதியில் விளை கின்றன.
எனவே, அவர்கள் தண் ணீர் வேண்டுமென்று கேட் பதில் எனக்கு மாறுபட்ட கருத்து அல்ல. அதிலும் எங்கிருந்து கேட்கிறார்கள் என்றால், ஒகேனக்கல் பகுதி யிலிருந்து, தண்ணீரை பம்ப் செய்து கொண்டுவந்து பெண் ணாகரம் அருகில் இருக்கிற கொண்டையன் கோட்டை ஏரியை நிரப்ப வேண்டுமென்று சொல்கி றார்கள். அந்த ஏரியில் தண் ணீரை நிரப்பினால், அங்கி ருந்து மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் போய்விடும் என்று கேட்கிறார்கள். அந்தத் திட் டம் நன்றாகத்தான் இருக் கிறது; செய்யலாம்.
ஆனால், உறுப்பினர் ‘இதனால் யாருக்கும் எந்தப் பாதகமும் இல்லை' என்று சொன்னார். அப்படிச் சொல்ல முடியாது. அவர்கள் சரபங்கா திட்டத்தை நிறை வேற்றி விட்டார்கள். ஆனால், தஞ்சை மற்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் அதற்கு மிகப் பெரிய எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருக் கிறார்கள். இன்றைக்கும் அங்குள்ள விவசாயிகள் அதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் திட்டத்தை நிறுத்த வேண்டுமென்று எங்களிடம் மனுக்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர் களுக்கு சமா தானம் சொல்லிக்கொண் டிருக்கிறோம். நானே ஒப்புக் கொள்கிறேன். அங்கிருப்பது மிகை நீர்தான். நான் இல்லை யென்று சொல்லவில்லை. மிகை நீரை எடுப்பதற்குக்கூட அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறார் கள். நாம், மிகை நீர் என்று சொல்கிறோம். "இல்லை, அது எங்கள் நீர்தான்" என்று அவர்கள் சொல்கிறார்கள்.
ஆகையினால், அவர்களை முதலில் நாம் சமாதானப்படுத்த வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். இந்தத் திட்டம் உடனடி யாகச் செயல்படுத்தக் கூடிய திட்டமல்ல. அவர்களையும் திருப்தியடையச் செய்து, செய்யப்பட வேண்டிய ஒரு பணி இது.
மேலும், முதலமைச்சர் அவர்களுடைய, யோச னையை, ஆணையைப் பெற்று, இந்தத் திட்டத்தை எப்படி செயல்படுத்த வேண் டுமோ, அவ்வாறு செய்து தருகி றோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.

No comments:
Post a Comment