எது மோசடி அரசியல்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

எது மோசடி அரசியல்?

சென்னையில் கடந்த ஞாயிறன்று (8.5.2022) நடைபெற்ற 'துக்ளக்' ஏட்டின் 52ஆம் ஆண்டு விழாவில் ஒன்றிய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசி இருக்கிறார். அது ஒருபுறம் இருக்கட்டும்.

'சோ'வுக்குப் பிறகு 'துக்ளக்'கைப் பறித்துக் கொண்ட திருவாளர் எஸ். குருமூர்த்தி அய்யர் மூர்க்கத்தனமாகப் பேசி இருக்கிறார். 

நாடு முழுவதும் பொதுவாக உள்ள 'நீட்' தேர்வு முறையில் தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.  அதனைப் பரிசீலித்த நீதிமன்றம் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளித்து விட்டு, அதனை தமிழகத்துக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு என்றும் தெரிவித்தது.

இந்திய கூட்டாட்சியில் உள்ள ஒரு பொதுவான தேர்வு முறை 'நீட்'. அதனை முன்னிறுத்தி தற்போது தமிழகத்தில் மோசடி அரசியல் நடத்தப்படுகிறது என்று பேசி இருக்கிறார் திருவாளர் குருமூர்த்தி. எது மோசடி அரசியல்? இந்தியா முழுவதும் பல்வேறு கல்வித் திட்டங்கள் உள்ள ஒரு துணைக் கண்டத்தில் ஒரு பொதுவான தேர்வை எப்படி நடத்த முடியும்? இதுதானே உண்மையான மோசடி.

உண்மையான திருடனைத் துரத்தினால் அந்தத் திருடனே 'திருடன்' 'திருடன்' என்று சத்தம் கொடுத்து ஓடித் தப்பிப்பது போன்ற மோசடி கருத்து அல்லவா குருமூர்த்தி கூறுவது!

பொதுத் தேர்வு என்று முகமூடி அணிவித்து திணிக்கப்படும் அந்தத் தேர்வு சி.பி.எஸ்.இ. முறையிலானது என்று ஆகி விட்ட பிறகு அது எப்படிப் பொதுத் தேர்வு ஆகும்?

+2 தேர்வு அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான முறை இருந்தபோது சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் கிடைத்த இடம் ஒரே ஒரு விழுக்காடு. 'நீட்' வந்த பிறகு அவர்களுக்கு  39 விழுக்காடு இடங்கள் கிடைத்தன என்றால் 'நீட்' யாருக்கானது  என்பது விளங்கிடவில்லையா?

இந்த மோசடிக்காரர்கள், சமூகநீதிக்காகக் குரல் கொடுப் பவர்களைப் பார்த்து  மோசடி அரசியல் நடத்துகிறார்கள் என்று சொல்லுவதற்குப் பெயர்தான் பார்ப்பனத்தனம் - திமிர் என்பது.

இரண்டாவதாக குருமூர்த்தி அய்யர் 'துக்ளக்' ஆண்டு விழாவில் பேசியது என்ன தெரியுமா?

ஒன்றிய அரசு எனக் கூறுவது மத்திய அரசை மட்டம் தட்டும் மனோ நிலை என்கிறார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளதைச் சொன்னால் ஏனிந்த பார்ப்பனர்களுக்கு நெறி கட்டுகிறது? 'மிஸீபீவீணீ tலீணீt வீs ஙிலீணீக்ஷீணீt, sலீணீறீறீ தீமீ ணீ ஹிஸீவீஷீஸீ ஷீயீ ஷிtணீtமீs'  என்று தானே சொல்லப்பட்டுள்ளது.

இதனுடைய தமிழாக்கம் தானே ஒன்றிய அரசு என்பது - ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை கொண்டவர்கள் இந்தியாவில் மாநிலங்களே இருக்கக் கூடாது என்ற கோல்வால்கரின் எண்ணத்தைக் கொண்டவர்கள் தானே இவர்கள்!  மேலும்,

இந்தியாவின் ஆட்சி மொழிக்குச் சமஸ் கிருதமே தீர்வு என்று கூறிய கோல்வால்கரின் சிஷ்யர்களாயிற்றே! இந்த நிலையில் உள்ள கூட்டத்தைச் சேர்ந்தவர்தானே குருமூர்த்தி அய்யர். அதனால்தான் ஒன்றிய அரசு என்று சொல்லுவதைக் கேட்டால் குமட்டிக் கொண்டு வருகிறது.

இந்தியை நாங்களும் எதிர்க்கிறோம் என்று தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கூறி விட்டாராம். அதற்காக அவரை மேடையில் வைத்துக் கொண்டே 

சீறி விழுந்திருக்கிறார்  - கண்டிக்கிறார் என்றால் - இவர் யார்? இவர்தான் இந்திய அரசையே நடத்துகிறாரா? ஒரு மாநிலத் தலைவரை கண்டிப்பதற்கு குருமூர்த்திக்கு இருக்கும் திமிரை என்னவென்று அழைப்பது?

இப்பொழுதாவது பிராமண, சூத்திரப் பேதத்தை திருவாளர் அண்ணாமலை அய்.பி.எஸ். அறிந்து கொள்வாரா?


No comments:

Post a Comment