சென்னை, மே.10 மயிலாப்பூர், மந்தைவெளியில் வீடுகள் வழங் கப்படும் மற்றும் தீக்குளித்து தன்னுயிர்மாய்த்துகொண்ட கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணா மலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோவன் தெருவில் நீர் நிலைப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடு களை கடந்த 29ஆம் தேதி முதல் நீதிமன்றம் உத்தரவுப்படி பொதுப் பணித்துறை அதிகாரிகள் இயந் திரங்கள் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். அதன்படி, அதி காரிகள் குடியிருப்புகளை இடிக்க முயன்றபோது, அதே பகுதியில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் வி.ஜி.கண்ணையன்(57) என்பவர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத் துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் சென்னை ஆர்.ஏ. புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த கண்ணையனின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல் வம் நேற்று (9.5.2022) பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆர்.ஏ புரத்தில் ஆக்கிர மிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த கண் ணையனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க உத்தர விட்டுள்ளேன். சென்னை ஆர்.ஏ. புரத்தில் தீக்குளித்த சம்பவமே கடைசி நிகழ்வாக இருக்க வேண் டும் என்பதே எனது விருப்பம். ஆக்கிரமிப்பு அகற்றப்படும் அருகி லேயே மறுகுடியமர்வு இருந்தால் நன்றாக இருக்கும் என்று சட்ட மன்ற உறுப்பினர்கள் கூறினர். அதன்படி, மந்தைவெளி, மயிலாப் பூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டி வரும் வீடுகளில், ஆர்.ஏ.புரம் மக்கள் மறு குடியேற்றம் செய்யப் படுவார்கள். ஆக்கிரமிப்பு அகற்று வது குறித்து மறுகுடியமர்வு கொள்கை விரிவாக உருவாக்கப் படும். வரும் காலங்களில் ஆக்கிர மிப்பு அகற்ற வேண்டிய தேவை ஏற்படின், மறு குடியேற்றம் தொடர்பாக முன்கூட்டியே சம் மந்தப்பட்ட மக்களுடன் கலந்தா லோசித்து, மறு குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'', என் றார்.

No comments:
Post a Comment