சென்னை, மே 10 பணியிடங்களில் "உள்ளக புகார் குழு" அமைக்க மகளிர் ஆணைய தலைவரிடம் தோழி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்ப டும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு பாதுகாப்பு மற்றும் குறைதீர்ப்பு) சட்டம் 2013இன் படி அனைத்து பெண்கள் பணி செய்யும் இடங்களில் "உள்ளக புகார் குழுவை" அமைக்க அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தோழி பெண் தொழிலாளர்களின் செயல்பாட்டுக் குழு சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் தொழிலாளர்கள், அலுவ லர்கள், மாணவர்களிடம் 1,16,545 கையெழுத்து பெறப்பட்டது. அந்த கையெழுத்து ஆவணங்களை சென் னையில் நேற்று (9.5.2022) வெளியிட்டு தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.கே.குமாரியிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி சமர்ப்பித்தார்.
அந்த ஆய்வறிக்கையில், 2013ஆம் ஆண்டு பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் குறைதீர்ப்பு) சட்டப்படி அனைத்து பணியிடங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும்.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை உடனடியாக உள்ளக புகார் குழு அமைக்கவும், கண்காணிக்கவும் வேண் டும். தொழிற்சாலைகளில் அமைக்கப் படும் குழுக்களில் பெண்கள் சார்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் நியமிக் கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்யவேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப் படும் குழுக்களில் மாணவர்களின் பங்கேற்பினை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
புகார்தாரர்களுக்கு உரிய பாது காப்பை உறுதி செய்யவேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பற்றிய புகாரை அச்சமின்றி தெரிவிக்க அனைத்து இடங்களிலும் பிங்க் கலர் புகார் பெட்டியை அடையாளப் படுத்தும் விதமாக அமைக்க வேண்டும் என அந்த ஆய்வறிக்கையில் வலியுறுத் தப்பட்டுள்ளது.
பின்னர் சுகந்தி பேசுகையில், பணியிடங்களில் பாலியல் வன்முறை தடுப் புச்சட்டம் 2013ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகள் கடந்த பிறகுதான் அனைத்து இடங்க ளிலும் அதற்கான குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. அரசு அலுவலகங்களில் கூட இன்னும் குழு அமைக்கப்படவில்லை. அரசு அலுவலகங்களிலே இன்னும் குழு அமைக்கப்படாமல் உள்ளது மிகப்பெரிய குற்றமாகும்.
பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் அந்த குழு முழுமையாக அமைக்கப்படவில்லை. எனவே மகளிர் ஆணையம் உடனடியாக தலையிட்டு குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
வீட்டுவேலை மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உள்ளூர் அளவில் உள்ள புகார் கமிட்டி குறித்து அந்த தொழிலாளர்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்றார்.
மகளிர் ஆணைய தலைவர் ஏ.கே.குமாரி பேசுகையில், பெண்களுக்கு பணியிடங்களில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கான சட்டம் இருக்கிறது. அதை மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளது. மகளிர் ஆணையம் பெண்கள் அமைப்புகளுடன் இணைந்து முழுமையாக குழு அமைக் கவும், புகார் பெட்டி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
No comments:
Post a Comment