வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் மன்னார்குடி ஜீயர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கழக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 8, 2022

வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் மன்னார்குடி ஜீயர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கழக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளிப்பு

 


திராவிடர் கழகத்தின் சார்பில் முன் வைத்த கோரிக்கைகளை தொடர்ந்து அரசமைப்புச் சட்டம் பிரிவு 23அய் சுட்டிக் காட்டி பட்டினப் பிரவேசத்திற்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்தார். இதனை அடுத்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பல்லக்கு தூக்குவதை தடுத்தால் தமிழ்நாடு அமைச்சர்கள் யாரும் நாட்டில் நடமாட முடியாது என மிரட்டல் விடுத்த மன்னார்குடி செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயரை கைது செய்ய வலியுறுத்தி 06.05.2022 அன்று தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அவர்களை வழக்குரைஞர் தளபதி பாண்டியன், லாரன்ஸ், மாரிமுத்து, சரத்குமார் ஆகியோருடன் நேரில் சந்தித்து கழகத்தின் சார்பில் வழக்குரைஞர் துரை அருண் புகார் அளித்தார்.

படம் 1:  பழனியில் மாவட்ட தலைவர் பொ.பெ.இரணியன், மண்டல இளைஞரணி செயலாளர் குண.அறிவழகன் ஆகியோர் காவல்துறையில் புகார் அளித்தனர். படம் 2: திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன் தலைமையில் காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

படம் 1:  ஆவடி மாவட்ட தலைவர் பா.தென்னரசு தலைமையில் ஆவடி நகர தலைவர் முருகன், பகுத்தறிவாளர் கழக செயலாளர்  ரா.முருகேசன், துணை செயலாளர் கார்த்திகேயன், மாவட்டத் துணை தலைவர் ஏழுமலை, நகர செயலாளர் தமிழ்மணி, பகுத்தறிவாளர் கழக ஜெயராமன், ஆவடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். படம் 2: நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் இரா.ஜெயப்பிரகாஷ் தலைமையில் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

7.05.2022 அன்று காலை வன்முறையை தூண்டும் மன்னார்குடி ஜீயர் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மாவட்ட கழக தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் கோவை காவல் துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. நிகழ்வில் மண்டல செயலாளர் ச சிற்றரசு, மாநில மாணவர் கழக துணை செயலாளர் மு.ராகுல்,  மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்ச்செல்வன், மாநகர தலைவர் புலியகுளம் க.வீரமணி, தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் வெங்கிடு, மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து, தோழர் தமிழ்முரசு, மாணவர் கழகத் தோழர் தமிழ்ச்செல்வன், கிழக்கு பகுதி செயலாளர் கிருட்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுத்த மன்னார்குடி ஜீயரை கைது செய்யக் கோரி விருத்தாசலம் காவல் ஆய்வாளரிடம் கடலூர் மண்டலத் தலைவர் அரங்க.பன்னீர் செல்வம் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. விருத்தாசலம் கழக மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன், நகரத் தலைவர் நா.சுப்பிரமணியன்,  த.சேகர், கம்மாபுரம் ஒன்றியச் செயலாளர் த.தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.சிலம்பரசன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.இராமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment