சாதாரண குடிமகன் மனுவிற்கும் காவல்துறையினர் பதிலளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

சாதாரண குடிமகன் மனுவிற்கும் காவல்துறையினர் பதிலளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்அறிவுறுத்தல்

மதுரை, மே 29  ஒவ்வொரு சாதாரண குடிமகனின் மனுவிற்கும் காவல்துறையினர் பதிலளிக்க வேண் டுமென உயர்நீதிமன்றக் கிளை அறிவுறுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த விசா லட்சுமி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பழநி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடை வைத்துள்ளேன். இதற்கு தடையின்மை சான்று கேட்டு பழநி நகர் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளேன். இதுவரை சான்று வழங்கவில்லை. எனவே, தடையின்மை சான்றை விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். பழநி நகர் காவல் ஆய்வாளர், ‘‘தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்ததாக மனுதாரர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதால் அவருக்கு இதுவரை தடையின்மை சான்று வழங்கவில்லை’’ என்றார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் மனுவை நிராகரித்து காவல் துறையினர் உத்தரவிடவில்லை. எந்தவித பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. இது காவல்துறையினரின் மந்தமான செயலையே காட்டுகிறது.

ஒவ்வொரு சாதாரண குடிமகனின் மனுவிற்கும் காவல்துறையினர் எந்தவிதத்திலும் பதிலளிக்க வேண் டும். ஆனால், பதிலளிக்காமல் கிடப்பில் வைக்கக்கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகள் காவல்துறையினரின் பொறுப்பற்ற அணுகுமுறையைக் காட்டுகிறது.  ஒவ் வொரு ஏழை குடிமகனாலும் அதிகம் செலவிட்டு நீதிமன்றத்தை நாட முடியாது. ஆடல், பாடல் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு கூட நீதிமன்றத்தின் உத்தர வைப் பெறவேண்டு மென்ற காவல்துறையினரின் அணுகுமுறை தேவையற்றது. காவல்துறையினரின் செயல்பாடற்ற நிலை நிராகரிக்கப்பட வேண்டும். எனவே, மனுதாரரின் மனுவை திண்டுக்கல் காவல் கண் காணிப்பாளர் 10 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment