சென்னை, மே 30 சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (கல்வி) சினேகா கூறியதாவது:
சென்னை மாநகராட்சி சார்பில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலையில் சென்னையை மேம் படுத்தும் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. குறிப்பாக, ஒன்றிய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் 2022-2023ஆம் கல்வியாண்டில் சென்னைப் பள்ளி மாணவிகளுக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்தப் படுகிறது. அதில், ரூ.23.66 கோடியில் சானிட்டரி நாப் கின்கள் வழங்குதல், ரூ.32.98 கோடியில் கழிப்பறை வசதிகளை மேம்படுத்தப்படுத்துதல், ரூ.5.47 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள், ரூ.6.91 கோடியில் தற்காப்புக் கலை பயிற்சி, சென்னை மாநகராட்சி பள்ளியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பாலின குழுக்கள், பள்ளி மாணவர்கள் திறனை மேன்படுத்த ரூ.40 லட்சம் செலவில் கண்காட்சிகள், 2022-2023ஆம் கல்வியாண்டில் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.1.86 கோடியில் இணைய சேவை, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ரூ.5.47 கோடியில் கண்காணிப்பு கேமரா போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
இந்த பணிகளை உடனே தொடங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் அதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே பள்ளிகளில் மாணவியருக்கு இலவச நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. நெசப்பாக்கம், திருவான்மியூர் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கழிவறைகளை மேம்படுத்தும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் சில மாதங்களில் அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் இந்த பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வர உள்ளது.
அதேபோல், பள்ளிகளில் கண்காணிப்புக் கேம ராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சி நிதி நிலையில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் மாணவ, மாணவியருக்கு முழுமையாக சென்றடையும். பள்ளி கோடை விடுமுறை நாளில் அனைத்து மாநகராட்சி பள்ளிகளையும் சுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளோம், என்றார்.
No comments:
Post a Comment