பாட்னா, மே. 30- பீகார் மாநி லத்தில் உள்ள ஜமூய் பகு தியில் ஒரு கால் இல்லாத சிறுமி பல கிலோமீட்டர் தூரம் ஒற்றைக்காலில் குத்தித்து குதித்து பள்ளிக் குச் சென்ற காணொளி பரவ அவருக்கு தற்போது செயற்கை கால் கிடைத்து பள்ளிக்குச் சென்று வரு கிறார்.
மாவோயிஸ்ட் பாதிப் புக்குள்ளான பகுதிகளில் ஒன்றான பீகாரின் ஜாமுய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமியான சீமா மான்ஜி. 10 வயதான சீமாவின் தந்தை கூலி தொழிலாளர். இவர் வேறு மாநிலங்க ளுக்கு சென்று தான் வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். சீமா வின் தாயாரும் செங்கல் சூளையில் வேலை பார்க் கிறார். சீமாவின் உடன் பிறந்தோர் 5 பேர். ஆறு குழந்தைகளில் இரண்டா வது குழந்தையான சீமா வுக்கு இரண்டு ஆண்டுகள் முன் விபத்தில் சிக்கியதில் ஒரு கால் இல்லாமல் போனது.
விபத்தில் தனது ஒரு காலை இழந்தாலும் இந்த சிறுமி நம்பிக்கையை இழக்காமல் தினமும் ஒரு கி.மீ. தூரம் ஒற்றைக் காலி லேயே பள்ளிக்கு சென்று படித்து வந்தார். தனது வீட்டிலிருந்து தினமும் ஒரு கிலோ மீட்டர் தூரம் உற்சாகம் குறையாமல் பள்ளி செல்லும் சிறுமி சீமாவின் காட்சிப் பதிவு இணையதளத்தில் வைர லானது. இவருக்கு டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாலிவுட் நடிகர் சோனு சூட் உள் ளிட்ட பலர் வியந்து பாராட்டி உதவிக்கரம் நீட்டிய நிலையில், அம் மாநில அரசு செயற்கை கால் பொருத்த உடனடி யாக உத்தரவிட்டுள்ளது.
அதன் பேரில் அம் மாநிலத்தின் கல்வித் துறை சார்பில் சிறுமி சீமாவுக்கு வெற்றிகரமாக செயற்கை கால் பொருத் தப்பட்டுள்ளது. புதிய காலுடன் சீமா நிற்கும் ஒளிப்படத்தை சுட்டுரை யில் அய்ஏஎஸ் அலுவலர் அவானிஷ் சரண் பகிர்ந்துள்ளார். மாணவி சீமாவுக்கு நடிகர் சோனு சூட்டின் தொண்டு நிறு வனமும் உதவி செய்ய முன்வந்துள்ளது.
தான் சிறப்பாக படித்து ஆசிரியராக வேண்டும் என்ற கனவைக் கொண் டுள்ள சீமா, தன்னைப் போலவே பலருக்கும் கல் வியை கொண்டு சேர்ப் பதே நோக்கம் எனக் கூறி யுள்ளார்.

No comments:
Post a Comment