சென்னை, ஜூன் 26 தனியாருக்கு நிகராக கட்டடம் கட்ட தொழில் நுட்ப வல்லுநர் குழு அமைக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் ஆகியோர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கோட்டூர்புரம் திட்டப்பகுதி யில் மறுகட்டுமானம் செய்யப்பட வுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 1476 குடியிருப்புதாரருக்கு கருணைத் தொகையாக ரூ.3.54 கோடிக்கான காசோலைகளை வழங்கினர்.
தொடர்ந்து, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:
சென்னையில் மட்டும் 27,500 அடுக்குமாடி குடியிருப்புகள் மக்கள் வாழ தகுதியற்ற வீடுகளாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இக்குடியிருப்புகளை கடந்த நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி ரூ.1200 கோடியில் 7500 வீடுகளும், நடப்பாண்டு ரூ.1200 கோடியில் 7500 வீடுகளும் ஆக மொத்தம் ரூ.2400 கோடி மதிப்பீட்டில் 15000 அடுக்குமாடி குடியிருப்புகள் மறு கட்டுமானம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குடியிருப்புதாரர்கள் அனைவரும் விரைவில் இந்த குடியிருப்புகளை காலி செய்யும் பட்சத்தில் புதிய குடியிருப்புகளின் கட்டுமான பணிகள் தொடங்கப்படும்.
15 முதல் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடியிருப்புகளில் புனரமைப்பு பணி மேற்கொள்ள இதுவரை ரூ.170 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த கால ஆட்சியில் குடியி ருப்புகள் தரமில்லாமல் கட்டப்பட் டன. தற்போது கட்டப்படும் கட்ட டம் தனியாருக்கு நிகராக இருக்கும். கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய தனியார் தொழில்நுட்ப வல்லுநர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
3 மாதத்திற்கு ஒருமுறை கட்டுமான பணிகளின் தரம் குறித்து ஆய்வுக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும். தற்போது கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் 50 வருட காலத்திற்கு நீடித்து நிலைத்து நிற்கும்.
குடியிருப்பு பராமரிப்பு பணி களை மேற்கொள்ள “நம் குடியிருப்பு நம் பொறுப்பு” திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இத்திட்டத் திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. 369 குடியிருப்பு நலச்சங்கங்கள் உரு வாக்கப்பட்டு உள்ளது.
எம்எல் ஏக்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் இக் குடியிருப்பு சங்கங்களை உரு
வாக்க பொது மக்களுடன் இணைந்து முனைப்புடன் செயல் பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment