இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வா தார இயக்கத்தின் சார்பில் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு மற்றும் பணியாற்றும் திட்டத்தின் கீழ், நகர்புற படித்த வேலை வாய்ப் பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது இத்திட்டத்தின் கீழ், திறன் வளர்ப்பு பயற்சிகள் 2022 - -2023 ஆண்டிற்கு திருவள்ளுர் மாவட்டத்தில், நடத்துவதற்கு உரிய நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது. திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவ னங்கள் தேசிய திறன் வளர்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட் டிருக்க வேண்டும். பிரதமர் கவுசல் கேந்திரா பயிற்சி மய்யங்களை கொண்ட திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங் களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விதிமுறைகளின்படி, அரசு மூலம் வழங்கப்படும் திறன் வளர்ப்பு பயிற்சிகள் மற்றும் ஊதியத்துடன் வேலைவாய்ப்பு, பயிற்சி முடித்தமைக் கான முன் அனுபவம் இருக்க வேண்டும். உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி யான திறன் வளர்ப்பு பயிற்சி நிறு வனங்கள், தங்களது கருத்துருக் களை திருவள்ளுர் மாவட்ட ஒருங் கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளாகத்தில் உள்ள தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் வருகிற 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment