ஊத்துக்கோட்டை, ஜூன் 28- கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கடந்த மாதம் 5-ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்தது.
சென்னை குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா தண்ணீர் முழுவதும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இதனால் இந்த 2 ஏரிகளிலும் நீர் இருப்பு அதி கரித்து. 90 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக செம்பரம் பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரி களுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட் டது. எனினும் தொடர்ந்து 3 நாட்கள் பலத்த மழை கொட்டியதால் பாது காப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீரை வீணாக வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான நீர் இருப்பதால் கூடுதல் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. இதைத்தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா தண்ணீர் முழுவதும் தற் போது பூண்டி ஏரியிலேயே சேமிக்கப் பட்டு வருகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி ஆகும். இதில் தற்போது 1,383 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. எனினும் பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமிக்க அதிகாரிகள் விரும்பவில்லை. மேலும் ஏரியில் உள்ள நீர் திறப்பு மதகு களை சீரமைத்து தண்ணீர் சேமிப்பை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இதேபோல் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியிலும் போது மான தண்ணீர் உள்ளது. இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறப்பை வருகிற 1-ந்தேதி முதல் நிறுத்த தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். அடுத்த கட்டமாக செப்டம்பர் மாதத்தில் தண்ணீரை திறந்து விடும்படி கூறி உள்ளதாக தெரிகிறது
No comments:
Post a Comment