புதுடில்லி, ஜூன் 28- குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாள ராக போட்டியிடும் யஷ்வந்த் சின்கா நாடு முழுவதும் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ள ஒருங்கிணைக்க 11 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
யஷ்வந்த் சின்கா நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டத் திட்டமிட்டுள்ளார். இதற்காக வரும் 29 ஆம் தேதி கேரளாவில் இருந்து தமது பிரச்சார பயணத்தை அவர் தொடங்குகிறார். அடுத்தநாள் 30 ஆம் தேதி தமிழ்நாடு வரும் யஷ்வந்த் சின்கா, அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். இதனிடையே யஷ்வந்த் சின்காவிற்கு உதவியாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 11 பேர்கள் அடங்கிய பிரச்சாரக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுகேந்து சேகர் ராய், மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரி, சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரபுல் பட்டேல், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ரஞ்சித் ரெட்டி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் மனோஜ் ஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, சிவ சேனைக்கட்சி நிர்வாகி ஒருவர் மற்றும் சிவில் சொசைட்டியின் சுதீந்திர குல்கர்னி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment