தொழிற்கல்வி மாணவர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 28, 2022

தொழிற்கல்வி மாணவர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு

சென்னை, ஜூன் 28  பொறியியல் கல்லூரியில் சேர தொழிற்கல்வி மாணவர்களுக்கு 2% இட ஒதுக்கீடு வழங்கப்படும். அதேபோல் தமிழ்நாட்டில் ஜூலை 18ஆம் தேதி பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று (27.6.2022) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 2ஆம் ஆண்டு, 3ஆம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஜூலை 18ம் தேதி வகுப்புகள் தொடங்கப் படும். சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தான் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும். கடந்தாண்டை விட இந்தாண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்படும். பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 85,902 மாணவர்கள் விண் ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்பு கிடைக்கவில்லை என்கிற ஏக்கம் மாணவர் களுக்கு இருக்கக் கூடாது என முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.

பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேர்ந்து கொள்ளலாம். பொறியியல் கல்லூரியில் சேர தொழிற்கல்வி மாணவர்களுக்கு 2% இட ஒதுக்கீடு வழங்கப்படும். மாவட்டங்கள் தோறும் 'கல்லூரி கனவு' திட்டம் செயல் படுத்தப்படும். பள்ளிகளில் தொழிற்படிப்பு படித்த மாணவர்கள் இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரலாம். அண்ணா பல்கலைக்கழகம், உறுப்புக் கல் லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் சேரலாம். 2% இட ஒதுக்கீட்டில் இந் தாண்டே தொழிற்கல்வி மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கப்படு வார்கள். உயர்கல்வி பயிலும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. மகளிர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் முதலமைச்சர் தொடங்கி வைப்பார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment