மராட்டிய மாநிலத்தில் ‘ஆபரேஷன் தாமரை’ பெயரில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர் குமாரசாமி கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 28, 2022

மராட்டிய மாநிலத்தில் ‘ஆபரேஷன் தாமரை’ பெயரில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர் குமாரசாமி கண்டனம்

சிமோகா, ஜூன் 28- மகாராட்டிர மாநில ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதியில் ஈடுபட்டிருப் பதாக மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலை வரும், கருநாடக மேனாள் முதலமைச்சருமான குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

சிமோகாவில் இதுதொடர்பாக செய்தியா ளர்களிடம் அவர் கூறியதாவது:

மகாராட்டிராவில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி செய்து வருகிறது. அங்கு பாஜக ‘ஆபரேஷன் தாமரை’யில் ஈடுபட்டுள்ளது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கண்ணுக்கு தெரியாத கைகள் உள்ளன.  கருநாடகத்தில் எனது தலைமையிலான காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து, இங்கும் அவர்கள் ஆட்சியைப் பிடித்தனர். அதைத்தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் ஆட்சியை கவிழ்த்த னர். தற்போது மகாராட் டிராவில் ஆட்சியை கலைக்க முயற்சிக்கின்றனர்.  நாட்டில் தங்களை தவிர மற்ற கட்சிகள் ஆட்சியில் இருக்கக் கூடாது என்று பாஜகவினர் விரும்பு கின்றனர்.  இதற்குப் பதிலாக அனைத்து மாநிலங் களிலும் தாங்களே ஆட்சியில் இருக்கும் வகை யில் பாஜகவினர் நாடாளுமன்றத்தில் சட்டம்  இயற்றிக் கொள்ளலாம். எதிர்க்கட்சிகளின் வேலையாவது மிச்சமாகும். அவர்கள் வீடு களிலேயே ஓய்வு எடுத்துக்கொள்வார்கள். 

-இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.


No comments:

Post a Comment