1. இரங்கல் தீர்மானத்தை திராவிடர் கழக மாநில மகளிரணி பொருளாளர் அகிலா எழிலரசன், 2. விடுதலை ஆசிரியராக 60 ஆண்டுகளாக பணியாற்றிவரும் தலைவருக்கு 60 ஆயிரம் சந்தாக்கள் வழங்கிட வேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்மனத்தை திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தோழர்களின் பலத்த கரவொலியுடன் முன்மொழிந்தார். 3. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை தூத்துக்குடி மாவட்ட கழகத் தலைவர் மா. பால்இராஜேந்திரன், 4. பத்தாம் வகுப்புத் தேர்வில் - தமிழ்த் தேர்வில் மாணவர்களின் பெருந்தோல்வி மீது ஆய்வு தேவை என்ற தீர்மானத்தை அரியலூர் மாவட்ட கழகச் செயலாளர் க.சிந்தனைச்செல்வன், 5. திராவிட மாடல் அரசைப் பற்றி அவதூறுப் பிரச்சாரத்துக்குக் கண்டன தீர்மானத்தை மயிலாடுதுறை மாவட்ட கழகத் தலைவர் கடவாசல் ஆ.ச.குணசேகரன், 6. அக்னிபத் திட்டம் நாட்டுப் பாதுகாப்புக்காக அல்ல; ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களை இராணுவமயமாக்கும் திட்டமே என்ற தீர்மானத்தை திராவிட மகளிர் பாசறையின் மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதனி, 7. கடந்த காலக் கழகத் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை சிதம்பரம் மாவட்ட கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், 8. உயர்நீதிமன்ற பதவிகள் நியமனத்தில் சமூகநீதி தேவை என்ற தீர்மானத்தை திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி ஆகியோர் முன்மொழிந்தனர்.
தீர்மானங்களை வரவேற்ற கழகப் பொறுப்பாளர்கள், தோழர்களின் கரவொலிக்கிடையே அவை நிறைவேற்றப்பட்டன
No comments:
Post a Comment