சென்னை, ஜூன் 27 ஒருங்கிணைந்த சார்நிலை பதவிகளுக்கான 2ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு மூலச்சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கட்டுப் பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட அறிவிப்பு:
ஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான பணியிடங்களுக் கான இரண்டாம் கட்ட இணைய வழி சான்றிதழ் சரிபார்ப் பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப் பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற 4ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை(வேலை நாட்களில்) தங்களது மூலச்சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இசேவை மய்யங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக் குள் விண்ணப்பதாரர்கள் சான் றிதழ்களை பதிவேற்றம் செய்ய வில்லை எனில் அவ்விண்ணப்பதாரர் களுக்கு தேர்வு பணிகளில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என கருதி மேற்கண்ட பதவிக்கு அவர் களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
No comments:
Post a Comment