அய்தராபாத், ஜூன் 27 குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட் டணி சார்பில், திரவுபதி முர்மு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் 25.6.2022 அன்று மனு தாக் கல் செய்தார். இதே போல, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி கள் சார்பில், மேனாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட் பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
எதிரணி வேட்பாளர் யஷ்வந்த் சின் ஹாவுக்கும் சில மாநில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள் ளன. ஆனால், காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாத தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி, குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கும் என எதிர்ப் பார்த்த நிலையில், யஷ்வந்த் சின் ஹாவுக்கு ஆதரவுதர டிஆர்எஸ் தலைவரும், தெலங்கானா
முதல மைச்சருமு£ன கே.சந்திரசேகர ராவ் தீர்மா னித்துள்ளார்.
இன்று (ஜூன் 27) யஷ்வந்த் சின்ஹா வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, டிஆர்எஸ் கட்சி சார்பில், அக்கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் கேசவ
ராவ், நாகேஸ்வரராவ் ஆகிய இருவர் பங்கேற்க உள்ளனர்.
வாக்கு சேகரிக்க யஷ்வந்த் சின்ஹா அய்தரா பாத் வரும்போது, காங்கிரஸ் கட்சியினர் இல்லாமல், தனியாக அவரை கே.சந்திரசேகர ராவ் சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெலங்கானா அரசியல் வட் டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமருடன் பேச்சு
இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹா பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுடனும் சின்ஹா தொலைபேசியில் பேசினார். அப்போது, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தான் அறி விக்கப்பட்டபோது,
அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அளித்த உறுதியை நினைவுகூர்ந்தார்.
எல்.கே.அத்வானியுடனும் சின்ஹா பேசினார்.
அதேவேளையில், தன்னை பொது வேட்பாளராக தேர்வு செய்த அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் யஷ்வந்த் சின்ஹா கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில், “குடி யரசுத் தலைவராக நான் தேர்ந் தெடுக்கப்பட்டால், இந்திய அரசியலமைப் பின் அடிப்படை விழுமியங்கள் மற்றும் வழிகாட்டும் லட்சியங்களை பயமோ தயவோ இல்லாமல் மனசாட்சி யுடன் நிலை நிறுத்துவேன் என்று உங்களுக்கும், இந்திய மக்களுக்கும் உறுதி அளிக்கிறேன்.
உங்கள் ஆதரவையும் வழிகாட்டுதலையும் பெறுவதற் காக உங்களையும் உங்கள் கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பி னர்களையும் விரைவில் சந்திப்பேன் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment