ஜுலை 30 அரியலூர் இளைஞரணி மாநில மாநாட்டு சீருடை அணிவகுப்பில் புதுச்சேரி மண்டலத்திலிருந்து 100 இளைஞர்கள் தனி பேருந்துகளில் பங்கேற்க முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 7, 2022

ஜுலை 30 அரியலூர் இளைஞரணி மாநில மாநாட்டு சீருடை அணிவகுப்பில் புதுச்சேரி மண்டலத்திலிருந்து 100 இளைஞர்கள் தனி பேருந்துகளில் பங்கேற்க முடிவு

புதுச்சேரி மண்டல இளைஞரணி கலந்துரையாடலில் தீர்மானம்

புதுச்சேரி, ஜூன் 7- புதுச்சேரி மண்டல இளைஞரணி கலந்து ரையாடல் கூட்டம் புதுவை பெரியார் படிப்பகத்தில் ஜூன் 4 ஆம் தேதியன்று நடைபெற்றது. கூட்டத்தில் புதுச்சேரி மண்டல இளைஞரணிச் செயலாளர் கோ. அல்போன்ஸ் வரவேற்றார். புதுச்சேரி மண்டல இளைஞரணித் தலைவர் த.இராசா தலைமை வகித்து உரையாற்றினார். புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, மண்டலச் செயலாளர் 

கி.அறிவழகன், மண்டல அமைப்பாளர் இர.இராசு, பொதுக் குழு உறுப்பினர் லோ.பழனி, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் கு.ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன் நோக்கவுரையாற்றினார். அப்போது, சென்னை பெரியார் திடலில் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்ற மாநில இளை ஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்துவது குறித்தும் புதிதாக இணைந்த இளைஞர்கள் பெரியாரியலை  வாழ்க்கை நெறியாக எவ்வாறு ஏற்க வேண்டும் என்பது குறித்தும் விரிவாக பேசினார். பின்னர் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி முகாமில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்தும் உரையாற்றினார்.

கூட்டத்தில், மாநில இளைஞரணி அமைப்பாளர் 

ஆ.பிரபாகரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தா.தம்பி பிரபாகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:

தீர்மானம் 1:  ஏற்று செயல்படுவோம்!

மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்ட தீர்மானங்கள் 30.04.2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலை மையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 2: 

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு வாழ்த்து - நன்றி

எதிர்கால இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏப்ரல் 3 முதல் 25 வரை நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு உள்ளிட்ட முழக் கங்களை முன்னிறுத்தி கோடை வெப்பம் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்திய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு புதுச்சேரி மண்டல திராவிடர் கழக இளைஞரணி சார்பில் வாழ்த்துகளையும், நன்றியையும் இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 3: 

திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாடு  

திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாடு 2022 ஜூலை 30 அன்று அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டில் புதுச்சேரி மண்டலத்திலிருந்து நூற்றுக்குமேற்பட்ட இளைஞர்கள் தனிப் பேருந்தில் சென்று, அம்மாநாட்டில் நடைபெறும் சீருடை அணிவகுப்பில் பங்கேற்பது எனவும், இம்மாநில மாநாட்டை விளக்கி மண்டலம் முழுவதும் சுவரெழுத்துப் பிரச்சாரம் செய்வது மற்றும் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது எனவும் பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சிக்கு 5 இளைஞர்களை அனுப்புவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4:  

குற்றாலம் பெரியாரியல் பயிற்சி வகுப்பு 

2022 ஜூன் 8,9,10,11 ஆகிய தேதிகளில் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் புதுச்சேரி மண்டலத்திலிருந்து அதிகப்படியான இளைஞர்களை பங்கேற்க செய்வது என முடிவு செய்யப்படுகிறது. 

தீர்மானம் 5: 

60,000 'விடுதலை' சந்தா 

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான 'விடுதலை' நாளிதழுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆசிரியராக பொறுப்பேற்று 60 ஆம் ஆண்டு தொடங்க வுள்ளது. 60 ஆண்டுகளாக அயராது பணியாற்றிவரும் தமிழர் தலைவர் அவர்களை ஊக்கப்படுத்திடவும், இனவுரிமை மீட்பு போரில் வாளாக போரிடும் விடுதலைக்கு 60000 சந்தா சேர்ப்பு இயக்கத்தில் கழக இளைஞரணி பொறுப்பாளர்கள், தோழர்கள் மண்டல கழக பொறுப்பாளர்களோடு இணைந்து பணியாற்றி இலக்கை எட்டுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6:  கிராமப் பிரச்சாரம்

புதுச்சேரி மண்டலத்தில் கொம்யூன்கள் தோறும் கிளைக் கழக வாரியாக கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி, இளைஞரணி அமைப்பை புதுப்பிப்பது எனவும், இளை ஞர்களை  இயக்கத்தின்பால் ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு கிளைக் கழகத்திலும் கிராமப் பிரச்சார கூட்டங்களை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

கூட்டத்தில், இளைஞரணி பொறுப்பாளர் பாஷா, கரிஷ்மா பானு, ஷர்மிளா பானு, புதுச்சேரி நகராட்சித் தலைவர் ஆறுமுகம், அமைப்பாளர் குப்புசாமி, உழவர்கரை நகராட்சி அமைப்பாளர் சிவராசன், முத்துவேல், உலகநாதன், சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் ந.முத்துவேல் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment