மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தும் பணி அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 7, 2022

மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தும் பணி அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைப்பு

மதுராந்தகம், ஜூன் 7   - செங் கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தும் பணியை, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவ னங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்

செங்கல்பட்டு மாவட் டம் மதுராந்தம் ஏரியை ஆழப்படுத்தி, கொள்ள ளவை உயர்த்தும் பணி மற்றும் ஏரியின் கலங்கள் மறுவடிவமைக்கப்பட்டு உபரிநீர் போக்கியாக கட் டமைக்கும் பணி நேற்று (6.6.2022) தொடங்கியது.

இந்த நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் சட்டப் பேரவை உறுப்பினர் க.சுந் தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட் சியர் ஆ.ர.ராகுல்நாத் தலைமை தாங்கினார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தி யாளர்களிடம் கூறியதா வது:

மதுராந்தகம் ஏரி செங்கல்பட்டு மாவட்டத் தில் அமைந்துள்ள மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றா கும். இந்த ஏரி 1,058 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் 7,604 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரி கடந்த 60 ஆண்டு களாக தூர்வாரப்படாத தாலும், நீர்ப்பிடிப்பு பகு தியில் ஏற்பட்டு வரும் மண் அரிப்பால் ஏரியில் வண்டல் மண் படித்தும் சுமார் 24 சதவீதம் கொள் ளளவு குறைந்துள்ளது.

இந்த ஏரியை தூர்வார வேண்டும் என்று மது ராந்தகம் தொகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி ஏரியை தூர் வாரவும், கரைகளை பலப்படுத்தவும், ஏரியில் படித்துள்ள வண்டல் மண்ணைக் கொண்டு ஏரியின் அருகிலுள்ள தாழ் நிலங்களை சுமார் 1.5 அடிக்கு உயர்த்தவும், தற்போது உள்ள ஏரியின் கொள்ளளவான 530 எம்சிஎப்சியில் இருந்து உயர்த்தவும் திட்ட மிடப் பட்டுள்ளது. ஏரியின் தற் போதுஉள்ள நீர்த்தேக்க ஆழமான 23.30அடியி லிருந்து 24.94 அடியாக உயர்த்தும் விதமாகவும், ஏரியின்கலங்கள் மறு வடிமைக்கப்பட்டு, 12 கதவுகளுடன் கூடிய வெள்ள உபரிநீர் போக்கி யாக மீண்டும் கட்டப்பட வும் உள்ளது.

மேலும், ஏரியின் மதகு கள் மற்றும் வரத்து கால் வாய்கள் மேம் படுத்தப் படவுள்ளன. ஆழப்படுத் துவதன் மூலம் கிடைக்கும் மண்ணின் ஒரு பகுதி, ஏரி யின் கரைகளை பலப் படுத்தவும், ஏரியின் முழு கொள்ளளவு மட்டத்தை உயர்த்துவதால், அருகி லுள்ள தாழ் நிலங்கள் பாதிக்காத வண்ணம், நிலமட்டத்தை உயர்த்த வும் மண்ணின் ஒரு பகுதி பயன்படுத்தப்படும்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஒவ்வோர் ஆண் டும் ஏரியைச் சுற்றியுள்ள விளைநிலங்கள் நீரில் முழ்குவது தடுக்கப்படும். மேலும், 38 கிராமங்களில் குடிநீர் வசதி உறுதிப் ப டுத்தப்படுவதுடன், 3,500 விவசாய குடும்பங்கள், 9,000 விவசாய பணியா ளர்கள் பயன் அடைவார் கள். இந்தப் பணியை 24 மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment