உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல்மதுரை, ஜூன் 8- மேக தாதுவில் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை பற்றி காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு நேற்று மனு தாக்கல் செய்துள் ளது. இத்தகவலை தமிழ் நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட் டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17.06.2021 அன்று பிரதமரை சந்தித் தபோது பன்மாநில நதி யான காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட கருநாடக அர சுக்கு ஆலோசனை அளிக் குமாறு கேட்டுக்கொண் டார். அதைத் தொடர்ந்து நான், ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந் திர சிங் ஷெகாவத்தை 06.07.2021 அன்று சந் தித்து மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எந்த வித அனுமதியும் அளிக் கக் கூடாது என்று வலி யுறுத்தினேன்.
அதனைத் தொடர்ந்து, 12.07.2021 அன்று தமிழ் நாடு முதலமைச்சரின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், கருநாடக அரசு மேகதாது அணைக் கட்ட அனுமதிக்கக் கூடாது என ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர் மானத்தை, 16.07.2021 அன்று எனது தலைமை யில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் மத்திய நீர்வளத்துறை அமைச் சரை நேரில் சந்தித்து அளித்த போது, அவரும் தமிழ்நாட்டின் இசைவில் லாமல் எந்த அனுமதியும் மேகதாது திட்டத்திற்கு அளிக்கப்படமாட்டாது என்று உறுதியளித்தார்.
இருப்பினும் கரு நாடக அரசு 2022-23 ஆம் ஆண்டின் அதன் நிதிநிலை அறிக்கையில் மேக தாது அணை கட்டும் திட்டத்திற்காக ரூ.1000 கோடி (ரூபாய் ஆயிரம் கோடி) நிதி ஒதுக்கியுள் ளது என தெரிந்தவுடன், அதை எதிர்த்து தமிழ் நாடு அரசு 21.03.2022 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அத்தீர்மானத்தை ஒன் றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேகதாது திட்ட அறிக்கை குறித்து, இப் பொருள் பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதென தெரிவித்து, விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என தமிழ்நாடு அரசு உறுப்பினர் காவிரி நீர் மேலாண்மை ஆணை யத்தில் பல கூட்டங்களில் வலியுறுத்தியதின் பேரில் இப்பொருள் விவாதத் திற்கு எடுத்துக்கொள்ளப் பட வில்லை.
இச்சூழலில், 17.06.2022 அன்று நடை பெற உள்ள 16ஆவது ஆணையத்தின் கூட்டத் தில், மேகதாது அணைத் திட்டம் பற்றிய பொருள் விவாதிக்க ஆணையத் திற்கு அதிகாரம் உள்ளது என அதன் 25.05.2022 தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு 4.6.2022 தேதியிட்ட கடிதத்தில், மேகதாது அணைக் குறித்து விவாதிக்க ஆணையத் திற்கு அதிகாரம் உள்ளது என்ற கருத்து, உச்ச நீதி மன்றத்தின் 18.05.2018 அன்று அளித்த ஆணைக் கும், ஒன்றிய அரசு அதன் 01.06.2018 அன்று காவிரி ஆணையத்தின் செயல் கள் மற்றும் அதிகார வரம்புகள் பற்றிய அறிவிப்பிற்கும் முரண்பாடாக உள்ளதால், ஆணையத்தின் இக்கருத்து சரி இல்லை என்றும், இப்பொருளை விவாதப் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
தமிழ்நாடு அரசின் உறுப்பினர் 16ஆவது கூட்டத்தில் இப்பொருள், ஆணையத்தின் எல்லை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளதால் இது குறித்து விவாதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை உறுதியுடன் தெரிவிப்பார்.
மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் அதன் வரம்பை மீறி மேக தாதுவில் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை பற்றி விவாதிக்கக் கூடாது என ஆணையிட வேண்டி உச்ச நீதிமன்றத்தில் 7.6.2022 அன்று தமிழ் நாடு அரசால் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு தொடர்ந்து காவிரி பாசன விவசாயிகள் மற் றும் தமிழ்நாடு மக்களின் நலன்களையும், உரிமை யையும் காக்கத் தேவை யான அனைத்து நடவ டிக்கைகளையும் தொடர்ந்து உறுதியுடன் எடுக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment