புதுடில்லி, ஜூன் 8- தொலைக் காட்சி விவாதங்களில் பாஜக தலைவர்கள் பங் கேற்க கட்டுப்பாடு விதிக் கப்பட்டுள்ளது.
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்ளாக இருந்த நூபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் முகமது நபி குறித்து அவதூறாக கருத்து கூறியதாக புகார் எழுந் தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து இருவரும் பாஜகவில் இருந்து தற் காலிகமாக நீக்கப்பட்ட னர். இதுதொடர்பாக பாஜக வட்டாரங்கள் கூறியதாவது:
பாஜக ஊடகப் பிரி வால் அங்கீகரிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் கள், தலைவர்கள் மட் டுமே தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற் கலாம். எந்தவொரு மதத் தின் தலைவர் குறித்தும் அவதூறாக பேசக்கூடாது என்று அறிவுரை வழங் கப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்பு சர்ச் சைக்குரிய கருத்துகளை கூறிய பாஜக தலைவர்கள் குறித்து ஆய்வுசெய்யப் பட்டு 38 பேர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட் டிருக்கிறது. அவர்கள் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடக் கூடாது என்று கண்டிப் புடன் அறி வுறுத்தப்பட் டுள்ளது.
மத விவகாரங்கள் குறித்து சமூக வலைதளங் களில் கருத்து வெளியிடு வது, அறிக்கை வெளி யிடும் முன்பு கட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என்று உத் தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment