சிவகங்கை வேங்கைப்பட்டியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 8, 2022

சிவகங்கை வேங்கைப்பட்டியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு

சிங்கம்புணரி, ஜூன் 8- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோட்டை வேங்கைப்பட்டியில் ரூ.2.92 கோடியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. இங்கு 100 வீடுகள், ஆரம்ப சுகாதார நிலையம், ரேசன்கடை உள்ளிட்ட கட்டடங்களும், மேல் நிலை நீர்த்தேக்கத்தொட்டி, தெரு விளக்குகள், தார் சாலை உள்ளிட்ட வசதி களும் ஏற்படுத்தப்பட்டுள் ளன. இந்த சமத்துவபுரத் தின் திறப்புவிழா இன்று (8.6.2022) நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற் காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை மதுரைக்கு வந்தார். மதுரை-நத்தம் சாலையில் ரூ.120 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கலை ஞர் நினைவு நூலகக் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இன்று காலை வேங் கைபட்டிக்கு சென்ற முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் நினைவு சமத்து வபுரத்தை திறந்து வைத் தார். முன்னதாக சமத்து வபுரத்தின் முன் பகுதி யின் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத் தினார். அதைத் தொடர்ந்து சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறுவர் பூங்கா, அங்கன் வாடி மய்யம், விளையாட்டு  மைதானம், ரேசன்கடை, மேனாள் அமைச்சர் கே. மாதவன் நினைவு நூல கம் உள்ளிட்டவைகளை யும் முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் திறந்து வைத் தார்.

இதையடுத்து பயனா ளிகளுக்கு வீடுகளை வழங்கினார். வீடுகளை பெற்ற பயனாளிகள் முத லமைச்சருடன் குழுப் படம் எடுத்துக்கொண் டனர். 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமசந்திரன், பெரிய கருப்பன், ராஜகண்ணப் பன், மூர்த்தி, மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம் பரம், சட்டமன்ற உறுப் பினர் தமிழரசி, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திருப்பத்தூர் அருகே உள்ள காரையூருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு நடந்த அரசு விழா வில் கலந்து கொண்டு பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் ஏற்கெனவே நிறைவு பெற்ற ஏராள மான புதிய திட்டங்களை அவர் தொடங்கிவைத் தார். இந்த விழாவில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் 59,162 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். இந்த விழாவில் ஆயிரக்கணக் கான பொதுமக்கள், தி.மு. க.வினர் மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டை மாவட் டத்திற்கு புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மதுரை மற் றும் சிவகங்கை மாவட் டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டிருந்தன. காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment