மங்களூரு, ஜுன்6- இந்தியாவிலேயே முதல் மனித உரிமைப்போராட்டமாக நடைபெற்று தந்தைபெரியார் சிறைக் கொடுமைகளை அனுபவித்து, மனித உரிமை மீட்கப்பட்ட வரலாற்றுக்கு சொந்தமான இடம் வைக்கம். அப்போது வைக்கத்தில் கோயில் தெருக்கள் வழியாக இந்து மதத்தில் கீழ் ஜாதி என்று ஒதுக்கிவைக்கப்பட்ட மக்கள் நடப்பதற்கு ஜாதி ஆணவத் துடன் தடை போடப்பட்டிருந்தது. அத்தடையை தகர்த்திட ஈழவ சமூக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி னார்கள். அப்போதைய திருவாங்கூர் சமஸ்தான அரசு போராட்டத்தை ஒடுக்க அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. போராட்டத்தை முன்னெடுக்க தந்தைபெரியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தந்தை பெரியார் முழுவீச்சுடன் போராடி, சிறையேகி, போராட்டத்தை வெற்றி பெறச் செய்தார். மனிதஉரிமை மீட்புப் போராட்டமாக வரலாற்றில் இடம் பிடித்து, தந்தைபெரியார் வைக்கம் வீரர் என்று போற்றப்பட்டார்.
கடந்த 2014இல் ஒன்றியத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், வகுப் புவாத வெறுப்புப்பரப்புரைகள், தாக் குதல்கள், கொலைகள், வன்முறைகள், கலவரங்கள் என வடமாநிலங்களில் இந்துத்துவா வன்முறைகள் பெருகி வந்துள்ளன.
தென்னிந்தியாவில் தற்பொழுது பாஜக ஆளும் கருநாடக மாநிலத்தில் வகுப்புவாத வன்முறைகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
கருநாடக மாநிலத்தில் கோயில் சாலைகளில் பிற மதத்தவர்கள் செல்லக்கூடாது என்று சங் பரிவாரக் கும்பல் தடைபோட்டு வகுப்புவாத வன்முறை, கலவரத்துக்கு அடித்தள மிட்டு வருகின்றன. ஏற்கெனவே, அம்மாநிலத்தில் கோயில் திருவிழா போன்ற காலகட்டங்களில் வணிகர் களில் இசுலாமியருக்கு இடமில்லை என்று கூறிவருகின்ற நிலையில், தற்பொழுது கோயில் இருக்கும் சாலை வழியாக வாகனங்களில்கூட செல்லக் கூடாது என்று தடைபோடுகின்ற அவலமான சூழலை ஏற்படுத்தி வரு கிறார்கள்.
தட்சிண கன்னடாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலுக்கு செல்லும் சாலையில் இந்து அல்லாத வாகனங்கள் செல்ல தடை விதித்து சங்பரிவார் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். பெல் தங்காடி தெற்கு மகாகணபதி கோயி லுக்குச் செல்லும் சாலையில் கன்னட மொழியில் இவ்வாறு 2 பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. தர்மஸ்தலா கொக்கடாவில் உள்ள விஷ்வ ஹிந்து பரிக்ஷத், பஜ்ரங் தள் மற்றும் இந்து ஜாக்ரனா வேதி ஆகியவற்றின் பெய ரால் அறிவிப்பு பலகை வைக்கப்பட் டுள்ளது. “லவ் ஜிஹாத்” போன்ற செயல் களைத் தடுக்கும் வகையில், இந்துக்கள் அல்லாதவர்கள் ஓட்டும் ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அறிவிப்புப் பலகை கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இல்லை என் றும், எதுவும் செய்ய முடியாது என்றும் கோயில் நிர்வாகிகள் கூறுகின் றனர்.
கருநாடகாவில் கோயில் திருவிழாக் களில் முஸ்லிம் வியாபாரிகள் வியா பாரம் செய்வதற்கும் ஏற்கெனவே சங் பரிவார அமைப்புகள் வகுப்புவாத வெறியுடன் தடை போட்ட நிலையில் சங் பரிவார அமைப்புகள் தற்பொழுது தெருக்கள் வழியாகக் கூட இந்துக்கள் அல்லாதவர்கள் செல்வதற்கு தடை போட்டு தங்களின் மதவெறி, கலவரங் களுக்கு அடித்தளம் அமைத்து வரு கின்றன. கருநாடக மாநிலத்திலும், ஒன்றியத்திலும் பாஜக ஆள்கிறது என்கிற அதிகார, ஆணவத்துடன் ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரக் கும்பல்கள் மதவெறியுடன் ஓலமிட்டு வருகின்றன. 2014ஆம் ஆண்டில் ஒன்றியத்தில் ஆட்சிப்பொறுப்பேற்ற மோடி தலை மையிலான பாஜக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் மதச்சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
மாட்டிறைச்சியின் பெயரால் தாக்குதல்கள், கொலைகள், லவ் ஜிகாத், கர்வாப்சி, ஹிஜாப், ஹலால் உள்ளிட்ட பல்வேறு மதவெறுப்பு பரப்புரைகள், வன்முறைகள் ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார இந்துத்துவா அமைப்புகளின் வன்முறைகள் நடத்தப்பட்டு வரு கின்றன.
அரசமைப்புச்சட்டத்தின் பெயரால் உறுதி எடுத்துக்கொண்டு ஆட்சியில் அமர்ந்துள்ள பாஜகவினர் முற்றிலும் அதற்கெதிராகவே செயல்பட்டு வரு கின்றனர் என்கிற வேதனையில் மனித உரிமை ஆர்வலர்கள், மனித உரிமை களுக்கான செயற்பாட்டாளர்கள் 2024 தேர்தலில் பாஜகவை ஓரங்கட்டச் செய்வதே தீர்வு என்று கூறிவருகின்ற நிலையில், சங் பரிவாரங்களின் வகுப்பு வாத வன்செயல்கள் அதிகரித்த வண் ணம் உள்ளன.

No comments:
Post a Comment