புதுடில்லி. ஜூன் 6 நபிகள் நாயகம் குறித்து பாஜக செய் தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறாக பேசிய விவ காரம் பன்னாட்டு அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர் பாக நுபுர் சர்மாவை பா.ஜ.க. வில் இருந்து தற்காலிகமாக வெளியேற்றியுள்ள போதும் இது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வருகிறது. கத்தார் நாட்டுக்கான இந்திய தூதரை அழைத்த அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பெரு வணிக நிறுவனங்கள் தங்கள் கடைகளில் உள்ள இந்திய பொருட்களை அகற் றியும் அதன் மீது தடை செய்யப்பட்ட பொருட்கள் என்ற வாசகத்தோடு மூடியும் வைத்துள்ளனர்.
தவிர அந்நாடுகளில் உள்ள இஸ்லாமிய அமைப் பினர் மற்றும் மத குருமார் களும் பா.ஜ.க.வினரின் இந்த பொறுப்பற்ற பேச்சால் கொதித்துப் போயுள்ளனர். இதனால் அங்குள்ள நிறுவ னங்களில் வேலை பார்க்கும் இந்திய இந்துக்களை பணி யில் இருந்து நீக்கவும் சில நிறுவனங்கள் முயற்சி மேற் கொண்டு வருகின்றன. அய்க்கிய அரபு நாடுகளில் 35 லட்சம் இந்தியர்களும், சவுதி அரேபியா-வில் 15.4 லட்சம் மற்றும் குவைத்-தில் சுமார் 10 லட்சம் இந்தியர்களும் வேலை செய்து வருகிறார்கள்.
இதுவரை இந்தியர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த பா.ஜ.க.வின் பொறுப்பற்ற பேச்சும் நடவடிக்கையும் இந்த விவகாரத்தால் உலகம் முழுவதும் வாழும் 200 கோடிக்கும் அதிகமான இஸ் லாமியர்களுக்கு தெரியவந் துள்ளதால் இஸ்லாமிய நாடு களில் வேலை செய்து வரும் இந்தியர்கள் அச்சத்துடனும் கவலையுடனும் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகி றார்கள்.
தொலைக்காட்சி விவாதத் தின் போது முகமது நபி பற்றி மிகவும் மோசமான கருத்து களை தெரிவித்ததற்காக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை பாஜக இடை நீக்கம் செய்தது. அதே போல் இவரது பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து சமூகவலைதளத் தில் எழுதிய பாஜகவின் மற் றொரு ஊடகப் பொறுப் பாளர் நவீன் குமார் ஜிண் டாலை கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சி நீக்கி உள்ளது.
ஆனால் மதநல்லிணக் கத்தை உறுதி செய்யவேண்டு மென்றால் உடனடியாக இரு வரையும் பன்னாட்டு அள வில் இந்தியாவிற்கு தலைக் குனிவை ஏற்படுத்தியதற்காக தேசப்பாதுகாப்புச் சட்டத் தின் கீழ் கைதுசெய்து சிறை யில் அடைக்கவேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.
No comments:
Post a Comment