பாஜக சிறிய கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக சிவசேனா குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 6, 2022

பாஜக சிறிய கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக சிவசேனா குற்றச்சாட்டு

மும்பை, ஜூன்.6  தற்போது மகா ராட்டிராவில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது.  இது குறித்து மகாராட் டிராவை ஆளும் சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத், செய்தியாளர் களிடம், “மாநிலங்களவை உறுப் பினர் தேர்தலில் 3-ஆவது வேட் பாளரை நிறுத்தியதன் மூலம் பாஜக போட்டியிட முடிவு செய்து உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பாஜகவினர் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளைத் தான் நம்பி உள்ளனர்.  

எங்களிடம் அமலாக்கத்துறை இல்லை.  இந்த தேர்தலுக்காக பாஜக  பணத்தைக்  கண்டபடி செலவு செய்து வருகிறது.  மாறாக. அவர்கள் அதை சமூகப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம். இந்த தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி 4 இடங்களிலும் வெற்றி பெறும்." எனத் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment