நாடு முழுவதும் புதிதாக 4,270 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 6, 2022

நாடு முழுவதும் புதிதாக 4,270 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

 மும்பை, ஜூன் 6-  நாடு முழுவதும் புதிதாக 4,270 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 24,052 ஆக அதிகரித் துள்ளது. இந்தியாவில் சில மாதங்களாக கரோனா தொற்று குறைவாக பதிவாகி வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. தினசரி பாதிப்பு 3 மாதங்களுக்கு பிறகு4 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இதையடுத்து, கரோனா தடுப்புநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மகாராட்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

 கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து,சினிமா ஸ்டூடியோக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மும்பை மாநகராட்சி விதித்துள்ளது. ஸ்டூடியோக்களில் ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சிகளையோ, விழாக் களையோ நடத்தக் கூடாது என்றும்,அப்படி நடத்தினால் அதுபற்றிமுன்பே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தினசரி பாதிப்பு 1% தாண்டியது

இதனிடையே,தினசரி கரோனா பாதிப்பு குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று (5.6.2022) காலை வெளியிட்ட புள்ளிவிவரம்:

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 4,270 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட் டுள்ளது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 76 ஆயிரத்து 817 ஆக உயர்ந்துள்ளது. தினசரி பாதிப்பு சதவீதம் 34 நாட்களுக்கு பிறகு 1 சதவீதத்துக்குமேல் அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்தனர். இதுவரை கரோனாவால் மொத்தம் 5 லட்சத்து 24 ஆயிரத்து 692 பேர் இறந்துள்ளனர்.

நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 24,052ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய நாளைவிட 1,636 அதிகம் ஆகும். இந்தியா முழுவதும் இதுவரை 194.09 கோடிடோஸ்களுக்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

-இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment