செஞ்சி, ஜூன் 8- பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்புகளின் விழுப்புரம், திண்டி வனம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத் தாசலம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களின் கலந் துரையாடல் கூட்டம் 5.6.2022 ஞாயிறு காலை 10.30 மணி அளவில் செஞ்சி ஸ்டார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.
முன்னதாக செக்கடிக்குப்பம் காத்தவராயன், தஞ்சை பாவலர் பொன்னரசு ஆகியோர் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடி உற்சாகப்படுத்தினார்கள்.
கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் துரை. திருநாவுக்கரசு தலைமை ஏற்றார் .
விழுப்புரம் மண்டல திராவிடர் கழக தலைவர் கோ. சா .பாஸ்கர், விழுப்புரம் மண்டல திராவிடர் கழக செயலாளர் இளம்பரிதி, விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் பாலசுப்பிரமணியன், விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் சே.வ. கோபண்ணா ஆகியோர் முன்னிலை வகித் தார்கள்.
விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வே.இரகுநாதன் வரவேற்புரையாற்றினார். அடுத்து கூட்டத்திற்கு வருகை புரிந்தவர்கள் தங் களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
தொடர்ந்து தலைமை உரையாற்றிய துரை. திரு நாவுக்கரசு பகுத்தறிவு பொன்விழா நிறைவு மாநாட்டை செஞ்சியில் நடத்துவதற்கு வாய்ப்பளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து விழாவை சிறப்பாக நடத்துவது எப்படி என்பதைப்பற்றி எல்லாம் வந்து இருக்கிற வர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு தன்னுடைய தலைமை உரையை முடித்தார்.
அடுத்ததாக மாநில பகுத்தறிவாளர் கழக தலை வர் இரா.தமிழ்ச்செல்வன், கலந்துரையாடல் கூட் டத்தின் நோக்கம், பகுத்தறிவாளர் கழகத்தின் பொன் விழா தொடக்க மாநாடு எப்படி நடைபெற்றது, தற்போதைய நிலை என்ன, நிதி எவ்வளவு தேவை, என்னென்ன நிகழ்வுகள், என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றியெல்லாம் தெரிவித்தார். தொடர்ந்து மாநாடு வெற்றிபெற நிதி அவசியம் என்பதை வலியுறுத்திப் பேசினார்.
அடுத்ததாக மாநில துணைத் தலைவர் கோபு. பழனிவேல் துண்டறிக்கை தேவை என்பதை வலி யுறுத்தி, நிதி வசூல் தீவிரமாக செய்து வருவது பற்றியும் கூறினார்கள். முதல் தவணையாக 20 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறி வழங்கினார் .
அடுத்து உரையாற்றிய மாநிலத் துணைத் தலை வர் அண்ணா.சரவணன் தருமபுரியில் இருந்து 4 பேருந்து, கிருஷ்ணகிரியில் இருந்து 3 பேருந்து, திருப்பத்தூரிலிருந்து ஒரு பேருந்து ஆகிய எட்டு பேருந்துகள் வருவதாக கூறினார். துண்டறிக்கை மிகச் சிறப்பாக இருக்கிறது. துண்டறிக்கை வழங்கிய உடன் கொடை தருவதற்கு யாரும் தயங்குவதே இல்லை என்கின்ற செய்தியைத் தெரிவித்தார். தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட தலைவர் வி.வெங்கட்ராமன் ரூபாய் 2000 நிதி வழங்கினார்.
அடுத்து பேசிய மாநில துணைத்தலைவர் சி.ஏ.இரஞ்சித் குமார் தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நிச்சயம் தான் பூர்த்தி செய்வேன் என்றும், கள்ளக் குறிச்சி மண்டல கூட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து தனது சார்பாக ரூபாய் 20,000, வசூல் தொகை ரூபாய் 10,000 அளித்தார்.
அடுத்து பேசிய தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் ராஜவேல் துண்டறிக்கை அவசியம் பற்றி கூறினார்.
மாநில பகுத்தறிவு கலைத் துறை செயலாளர் மாரி. கருணாநிதி மாநாட்டில் கலை நிகழ்வுகளுக்கு தான் முழுவதும் பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறி எல்லோரையும் மகிழ்ச்சி அடையச் செய்தார். தொடர்ந்து தான் என்னவெல்லாம் செய்யப் போகி றேன் என்கின்ற விவரத்தை தெரிவித்தார்.
அடுத்து பேசிய மாநில பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் வா. தமிழ் பிரபாகரன் இந்த பகுத்தறிவாளர் கழக பொன் விழா மாநாடு கண்டு அடுத்து ஆசிரியர் அறிவிக்க இருக்கிற பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில மாநாட்டிற்கு தாங்கள் பயிற்சி பெறுவதாகவும் கூறினார்.
கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலா ளர் தமிழன்பன் கடலூரில் இருந்து ஒரு பேருந்து மற்றும் வாகன பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது என்ற தகவலையும், தங்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை நிச்சயம் முடித்துக் கொடுப் போம் என்ற உறுதியையும் கொடுத்தார்.
அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் முருகேசன் அங்கிருந்து ஒரு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்தார்.
இளைஞரணி மண்டல செயலாளர் பகவான் தாஸ் சுவரெழுத்து பிரச்சாரம் பற்றியும் தாங்கள் 1 வாகனத்தில் வருவது பற்றியும் கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழக செய லாளர் ச. சுந்தர்ராஜன் 2 வாகனங்களில் வருவதாகவும் கூறினார்.
திண்டிவனம் மாவட்ட திராவிடர் கழக செய லாளர் செ. பரந்தாமன் நிதி வசூல் பற்றியும், பிரச்சாரம் பற்றியும் உரையாற்றினார்கள்.
தொடர்ந்து திண்டிவனம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா. அன்பழகன் மாநாட்டு பணிகளில் தங்களுடைய பணிபற்றி குறிப்
பிட்டார்.
அடுத்ததாக விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் சே.வ.கோபண்ணா பொன்விழா மாநாட்டை செஞ்சியில் நடப்பதற்கு வாய்ப்பு அளித்த ஆசிரியருக்கு நன்றி தெரிவிப்போம். தொடர்ந்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆலோசனை கூறும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.
விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ப.சுப்பராயன் சுவரெழுத்து, நிதி வசூல் பற்றி தங் களுடைய மாவட்ட நிலைமை கூறி இரண்டு வாரத் திற்குள் முடித்து நிச்சயம் தருவோம் என்று உறுதி அளித்தார்கள்.
அடுத்து பேசிய விழுப்புரம் மண்டல திராவிடர் கழக தலைவர் தா.இளம்பரிதி தெருமுனை கூட்டம், சுவரொட்டி, வசூல் பற்றி உரையாற்றினார். தொடர்ந்து நன்கொடையாக முதல் தவணை ரூபாய் 10,000 அளித்தார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாநில ஆசிரியர் அணி தலைவர் வா.பிரபாகரன் வாசித்தார்கள். அனைவரும் ஒருமனதாக கையொலி எழுப்பி தீர்மானத்தை வழிமொழிந்தனர்.
தொடர்ந்து மாநாட்டுப் பணிக்குழுக்களின் பொறுப்பாளர்களை பொதுச்செயலாளர் வி.மோகன் படித்தார்.
மாநாட்டு பணிக்கான நிதி தொடர்பான விவரங் களை பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் கூறி னார்.
தொடர்ந்து பேசிய விழுப்புரம் மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவர் துரை.திருநாவுக்கரசு மற்றும் வே.இரகுநாதன் ஆகிய இருவரும் மகளிர் சுய உதவிக் குழுக்களை சந்தித்து மாநாடு தொடர்பாக பேசி இருப்பதாக கூறினார்கள்.
கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தந்த திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் மாநாடு எப்படி நடத்தப்படவேண்டும், மாநாடு சிறப்பாக நடத்துவதற்கு என்னென்ன வெல்லாம் செய்ய வேண்டும், இன்னும் செய்யவேண் டியது என்ன, செய்து இருக்கின்ற செயல்பாடுகளில் இன்னும் சேர்க்க வேண்டியது என்ன என்பது பற்றியெல்லாம் தெளிவாக எடுத்துரைத்தார்.
முனைவர் துரை. சந்திரசேகரன்
அடுத்து உரையாற்றிய பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் நிதி வசூல் பற்றி ஒவ்வொருவரையும் குறிப்பிட்டே உற்சாகப்படுத் தினார். நிதி எவ்வளவு முக்கியம், நிகழ்ச்சி எவ்வளவு முக்கியம், ஆசிரியரின் எதிர்பார்ப்பு என்ன, நாம் என்ன செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்பதை எல்லாம் எடுத்துரைத்தார் .
தொடர்ந்து மாநாட்டுக்கான விளம்பர ஸ்டிக்கர் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்டிக்கரை அறிமுகப் படுத்திய பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அதனை இரண்டு பொதுச்செயலாளர்களுக்கும், பகுத்தறி வாளர் கழக தலைவர், செயலாளர்கள் ஆகியோருக்கும் வழங்கி, வந்திருந்த அனைவருக்கும் வழங்கிடச் செய்தார்.
கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ்
நிறைவாக நிறைவுரை ஆற்றிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் இன்றைக்கு நான் இங்கு திடீரென்று வந்துள்ளேன். ஏற்கெனவே இரண்டு பொதுச் செயலாளர்கள் இங்கே இருக் கிறார்கள் 3 பொதுச்செயலாளர்களும் இங்கு வருகை தந்துள்ளது என்பது - இந்த நிகழ்வு எவ்வளவு முக் கியம் என்பதை அறிய வேண்டிய ஒன்று. இன்னும் 13 நாள்கள் மட்டுமே உள்ளன. இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன. செய்யலாம் நாம் மனது வைத்தால்..... அனைத்து வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கலாம் ....செய்து முடிக்க முடியும்'' என்பதை கூறி மாநாட்டிற்கு வாருங்கள்..... என வேண்டுகோள் விடுத்து ,அதுவும் குடும்பத்தோடு வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.
இறுதியாக விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் சே.வ. கோபண்ணா நன்றி கூறி னார்கள்.
அதற்கு முன்னதாக விழுப்புரம் திராவிடர் கழக துணைத்தலைவர் திருநாவுக்கரசு ரூபாய் 1000 வழங்கினார்.
விழுப்புரம் நகர திராவிடர் கழக துணைத் தலைவர் திருநாவுக்கரசு ரூபாய் 1000 வழங்கினார்.
தொடர்ந்து மாநாடு நடைபெறும் வள்ளி அண்ணாமலை மண்டபத்தை பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், துரை.சந்திரசேகரன், இரா,ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.
திறந்தவெளி மாநாட்டு இடத்தையும், பேரணி செல்லும் வழியையும்,பார்வையிட்டு ஆலோசனை தெரிவித்தார்கள்.
தொடர்ந்து மதிய உணவுடன் கலந்துரையாடல் கூட்டம் முடிவுற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
தீர்மானம் 1: பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டினை செஞ்சியில் நடத்துவதற்கு அனுமதி அளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு இக்கூட்டம் மகிழ்வான நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 2: பகுத்தறிவாளர் கழக பொன்விழா மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்திடவும், மாநாட்டிற் கான நிதி வசூல் சிறப்பாக செய்திடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3: பகுத்தறிவாளர் கழக பொன்விழா மாநாட்டிற்கு தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று மாநாடு வெற்றி பெறச்செய்யவேண்டும் என தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4: பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டிற்கு ஜூன் 19 அன்று செஞ்சிக்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும், மாநாடு பேரணி ஆகியவற்றை சிறப்பாக நடத்தவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.



No comments:
Post a Comment