சென்னை, ஜூன் 6- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னையில் நேற்று (5.6.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பசுமை விருதுகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:
`வாழ்ந்து காட்டுவோம்' திட் டம் சார்பில், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பசுமை விருதுகள் மற்றும் பசுமை உற்பத்திப் பொருட் கள் ஊக்குவிப்பு மானியம் வழங்கும் விழா, பயிலரங்கம், உழவர் உற்பத் தியாளர் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் கண்காட்சி ஆகியவை சென்னையில் நேற்று (5.6.2022) நடைபெற்றன.
உலக வங்கி நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டு வோம் திட்டம், 31 மாவட்டங்களில், 120 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,994 கிராம ஊராட்சி களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் சுயஉதவிக் குழுப் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளி கள், இளைஞர்கள் மற்றும் ஆர்வ முள்ள தொழில்முனைவோர் இடம் பெற்றுள்ளனர்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 40,000 உற்பத்தியாளர்களை உள்ளடக்கிய 50 உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்களை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இவற்றில் 80 சதவீத உறுப்பினர்கள் பெண்கள். 50 உழ வர் உற்பத்தியாளர் நிறுவனங்களில், 28 உழவர் உற்பத்தியாளர் நிறு வனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது 25 நிறுவனங்களுக்கு தரப்படுத்தல் பயிற்சிஅளிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத் தில் முதல்முறையாக `பசுமை'வகை ஆய்வும் இணைக்கப்பட்டுள்ளது. 22 உற்பத்தியாளர் கூட்டமைப் புகள் `பசுமை உற்பத்தியாளர் கூட் டமைப்புகளாக' கண்டறியப்பட் டுள்ளன.
இந்த கூட்டமைப்புக்கு பசுமை விருதுகளையும், 16 நிறுவனங்க ளுக்கு பசுமை விருது மற்றும் பசுமை உற்பத்திப் பொருட்கள் ஊக்கு விப்பு மானியமும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் வழங்கப்பட்டது.
முன்னதாக, உழவர் உற்பத்தி யாளர் அமைப்புக்களுக்கான பயி லரங்கம், உற்பத்தியாளர் குழுக்க ளின் தயாரிப்புப் பொருட்கள் கண் காட்சி ஆகியவை நடைபெற்றன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment