புதுடில்லி, ஜூன் 6- மக்களின் வரிப்பணத்தில்தான் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கட்டமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. ஒன்றிய பாஜக அரசோ, அரசமைப்புச் சட்டத் தில் உள்ள 22 மொழிகளில் மாநில மொழிகளை பின்னுக்குத் தள்ளி, ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு மட்டுமே முன்னு ரிமை, முக்கியத்துவம் அளித்து வருகின்றது.
ரயில்வேயின் அய்ஆர்சிடிசி இணையதளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இணையதளம், செயலி வழியாக ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யப்படுவது, அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள நிலவரப்படி, 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகமான அய்ஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்கின்றனர்.
ஆனால், இதில் தகவல்கள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே உள்ளன. இந்நிலைக் குக் காரணமான ஒன்றிய பாஜக அரசுமீது கடும் அதிருப்தி யும், எதிர்ப்பும் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பிராந்திய மொழி பேசும் மக்கள் மற்றவர்களின் உதவியை நாட வேண்டியுள்ளது. எனவே, குறைந்தபட்சமாக அதிக மக்கள் பேசும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையா ளம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும், இந்த சேவையை பெறும் வகையில் இணையதளத்தை மேம்படுத்த வேண் டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பணி ஓய்வு பெறுபவர்களை
தலைமை ஆசிரியர்களே விடுவிக்க அறிவுரை
சென்னை, ஜூன் 6- பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வயது முதிர்வின் காரண மாக ஓய்வு பெறும் அனைத்து ஆசிரியர்களையும் அந்தந்த தலைமை ஆசிரியர்களே பணிவிடுப்பு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. எனினும், பணியில் இருந்து விடுவிக்கும் முன்னர் சார்ந்த ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை, தணிக்கைத் தடை ஏதும் நிலுவையில் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னர் ஒப்புதல் வழங்க வேண்டும்.
இதுதவிர ஓய்வு பெறும் ஆசிரியர்களிடம் இருந்த பணிகள் அனைத்தும் முறையாக மறு ஒப்படைப்பு செய்யப்பட்டு உள்ளதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், இந்த பணிகளில் எந்த புகார்களுக்கும் இடமளிக்கக் கூடாது.
இது தொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment