சென்னை, ஜூன் 6 சென்னை கலை வாணர் அரங்கத்தில் நடந்து வந்த மலர் கண்காட்சி நேற்று டன் (5.6.2022) நிறைவு பெற் றது. கடைசி நாளான நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு மக்களி டம் கருத்துகளை கேட்டறிந்தார்.
கலைஞரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டா டப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த 3ஆம் தேதி கலைஞரின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண் டாடப்பட்டது. அதன் ஒரு பகு தியாக கலைஞரின் பிறந்தநா ளில் சென்னையில் மலர் கண்க £ட்சிக்கு அரசு ஏற்பாடு செய் தது. அதன்படி, கலைவாணர் அரங்கில் கடந்த 3ஆம் தேதி மலர் கண்காட்சி தொடங்கப் பட்டது.
ஊட்டி, கொடைக்கானல், மைசூரு, ஏற்காடு, புனே, கிருஷ் ணகிரி போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வண்ண மலர்கள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் பார் வைக்கு வைக்கப்பட்டது. குறிப்பாக ஆர்க்கிட், ஆந்தூரி யம், துலிப் பூ உள்ளிட்ட பல அரியவகை பூக்கள் மற்றும் பூச்செடிகள் என 200க்கும் மேற்பட்ட வகைகளில் கண்ணை கவரும் மலர்கள் கண்காட்சியில் இடம்பெற்றது. இந்த கண்காட் சியில் மலர் அலங்காரங்கள், காய்கறியால் செதுக்கப்பட்ட உருவங்கள், சுயபடம் எடுப்ப தற்கான பிரத்யேக இடங்கள் அமைக்கப்பட்டது. மேலும், மலர் வளைவுகள், மலர் தொட் டிகளில் வண்ண மலர்கள், மலர்களால் வடிவமைக்கப் பட்ட கோப்பை ஆகியவை நிறுவப்பட்டது. குதிரை, மயில், சிங்கம், கரடி ஆகியவைகளும் பார்வையாளர்களை வெகு வாக கவர்ந்தது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மலர்க் கண்காட்சியை பொது மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
இந்நிலையில், மூன்றுநாள் மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ.8.35 லட்சம் வசூலானதாக கூறப்படுகிறது. இறுதி நாளான நேற்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் கண் காட்சியை நேரில் சென்று பார் வையிட்டார். அப்போது, மலர் கண் காட்சி குறித்து பொது மக்களிடம், முதலமைச்சர் கருத்துகளை கேட்டறிந்தார்.

No comments:
Post a Comment