சென்னையில் நகர்ப்புற நல வாழ்வு மய்யங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 6, 2022

சென்னையில் நகர்ப்புற நல வாழ்வு மய்யங்கள்

சென்னை, ஜூன் 6 சென்னையில் நகர்ப்புற நல வாழ்வு மய்யங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். 

ஏழை -எளிய மக்களுக்கு அவர்களது வசிப்பிடங்களுக்கு அருகாமையிலேயே சிகிச்சை அளிக்க ஏதுவாக 708 நகர்ப்புற நல வாழ்வு மய்யங்கள் மாநிலத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிகளில் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற பேரவையில் அறிவித்தார். 

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் நகர்ப்புற நல வாழ்வு மய்யங்களை அமைக்க முதல் கட்டமாக 140 நிலையங் களுக்கும், 2ஆ-ம் கட்டமாக 60 நிலையங்களுக்கும் அனுமதி வழங் கப்பட்டுள்ளது. இந்த நகர்ப்புற நல வாழ்வு மய்யங்களில் ஒரு டாக்டர், ஒரு மருந்தாளுநர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவி யாளர் என 4 பேர் பணியமர்த் தப்பட உள்ளனர். ஒவ்வொரு நல வாழ்வு மய்யம் அமைக்கவும் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. 

முதலமைச்சரின் அறிவிப்பின் படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் 200 புதிய நகர்ப்புற நல வாழ்வு மய்யங்களை அமைப்பது தொடர் பாக மேயர் பிரியாராஜன் தலைமையில் கடந்த மாதம் 

13-ஆம் தேதி நடைபெற்ற ஆலோ சனைக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு நல வாழ்வு மய்யங்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். 

இந்த கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் நகர்ப்புற நல வாழ்வு மய்யங்களை அமைக்க இடங்களை தேர்வு செய்து விரைந்து பணிகளை தொடங்க அமைச்சர்களால் அறிவுறுத்தப் பட்டது. 

தயார் நிலையில் 3 இடங்கள்

அதன்படி, சென்னை மாநக ராட்சிக்கு உட்பட்ட 200 வார்டு களில் இதுவரை 98 இடங்களில் புதிய கட்டடங்கள் அமைத்து நல வாழ்வு மய்யங்களை அமைக்கவும், 75 இடங்களில் ஏற்கெனவே உள்ள மாநகராட்சி கட்டடங் களில் நல வாழ்வு மய்யங்களை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 24 இடங்களில் சரியான இடத்தினை தேர்வு செய்யும் பணிகள் நடை பெற்று வருகின்றன. 3 இடங்களில் நல வாழ்வு மய்யங்கள் தயார் நிலையில் உள்ளன என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment