இராஜபாளையம், ஜூன் 6- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதி யில் உள்ள காட்டன் சேலை கள் தயாரிக்கும் விசைத்தறி கூட தொழிலாளர்கள் நூல் விலை உயர்வை கண் டித்து ஞாயிறன்று முதல் காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஒன்றிய அரசு உடனடியாக நட வடிக்கை எடுக்கு மாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளை யம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் காட்டன் சேலைகள் தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆறு மாத காலமாக கடுமை யான நூல் விலை ஏற்றம் காரணமாக தொழில் செய்ய இயலாத நிலைமை ஏற்பட்டது. எனவே நூல் விலை உயர்வைக் கட் டுப்படுத்த வேண்டும். பதுக்கி வைத்துள்ள பஞ்சுகளை கண்டுபிடித்து சந்தைக்கு கொண்டு வர வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
நாளொன்றுக்கு ரூ.80 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்றும் இரண்டாயிரத்திற்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் நிலை ஏற்பட் டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment