புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியத் திராவிடர் கழக தலைவர் அ.சேக்கப் ஆசிரியர் - (வயது 79) 3.6.2022 அன்று உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறி விக்க வருந்துகிறோம்.
ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் பகுத்தறி வாளர் கழகத்திலும், பின்னர் திராவிடர் கழக ஒன்றிய தலைவ ராகவும் பொறுப்பு வகித்தவர். அவருக்கு மனைவி வசந்தா, மகள்கள் ஜெசி, தீபா, லதா, சாந்தி ஆகியோர் உள்ளனர்.
4.6.2022 அன்று லெம்பலக்குடி அவரது இல்லத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மண்டல கழக தலைவர் பெ.இராவணன், மாவட்ட கழக தலைவர் மு.அறிவொளி, மாவட்ட கழக செயலாளர் ப.வீரப்பன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அ.சரவணன், திருமயம் ஒன்றிய கழக செயலாளர் மாரியப்பன், வெ.ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

No comments:
Post a Comment