கரோனா பாதிப்பு அதிகரிப்பு: சிகிச்சை மய்யங்களை புனரமைக்கும் பணிகள் தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 6, 2022

கரோனா பாதிப்பு அதிகரிப்பு: சிகிச்சை மய்யங்களை புனரமைக்கும் பணிகள் தீவிரம்

புதுடில்லி, ஜூன் 6 மும்பையில் அமைக்கப் பட்டிருந்த மிகப்பெரிய கரோனா மய்யத்தை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மும்பை, மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் 3ஆவது நாளாக பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ளது. 

மாநிலத்தில் புதிதாக 1,357 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தலைநகர் மும்பையிலும் தொடர்ந்து நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று 889 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 1,396 நாட்களாக உள்ளது.  கரோனா அதிகரிப்பு காரணமாக கரோனா பரிசோதனையை அதிகரிக்க மராட்டிய சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment