சென்னை, ஜூன் 6 தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 9 மற்றும் 13 ஆகிய மண்டலம் உள்பட மொத்தம் 370 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் உள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தேனாம்பேட்டை மண்டலத்தில் கரோனா நோய் தொற்று கண்டறியப் பட்டுள்ள வார்டு 117ல் கிரி சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சுகாதார செயலாளர் ராதகிருஷ்ணன், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், மண்டல குழு தலைவர் மதன் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் முன்னதாக கல்லூரிகளில் அதிகளவு கரோனா பரவியது. தற்போது அது, குடியிருப்பு களிலும் பரவத் தொடங்கி உள்ளது. குறிப்பாக மண்டலம் 9,10 மற்றும் 11 ஆகிய இடங்களில் கரோனா அதிகமாக உள்ளது. இதுவரை சென்னையில் 370 பேர் தொற்றால் பாதித்து தங்களை வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண் டுள்ளனர். சென்னை தி. நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. தற்போது அவர்கள் நலமாக இருக்கிறார்கள். வீடுகளில் கிளஸ்டர் பாதிப்பு அச்சத்தை கொடுத் தாலும் பாதிப்பு லேசானதாக இருக்கிறது. மேலும், அவர்களுக்கு வீடு தேடி சென்று மருந்துகள் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல் பட்டு உள்ளிட்ட மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 17 வகை வைரஸ் பரவி வருகிறது, வைரஸ் பாதிப்பு பெரிதாக இல்லை என்றாலும் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளது. மேலும், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வந்தாலும் மற்றவர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் கவனக்குறைவாக இருக்கக் கூடாது.
தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் தொற்று
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கடந்த 2 ஆண்டுகளாக அதிகரித்து வந்த கரோனா தொற்று அண்மையில் படிப் படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் வீரியமடைந்துள்ளது. இதனை எதிர்கொள்ள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது.
பி.ஏ.4 வகை கரோனா தொற்று 4 பேருக்கும் பி.ஏ.5 வகை தொற்று 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உருமாறிய ஒமிக்ரான் தோற்றால் பாதிக்கப்பட்ட 12 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment