தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களில் காற்றாலைகள் மூலம் 1,910 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 6, 2022

தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களில் காற்றாலைகள் மூலம் 1,910 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி

சென்னை, ஜூன் 6 தமிழ் நாட்டில் காற்றாலைகள் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் 1,910 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. 

நடப்பாண்டில் உற்பத்தியா ளர்களிடம் இருந்து அதிக அளவு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதால், அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இதையடுத்து அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. 

இவற்றுக்கு தேவையான மின்சாரம் அனல், நீர், காற் றாலை, சூரியசக்தி போன்ற வற்றின் மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றில் காற்றாலைகளின் பங்கு முக் கியமான ஒன்றாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் கன்னியா குமரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் 8,615.22 மெகாவாட் அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், மின் உற்பத்தியும் அதிகமாக இருக் கும். அந்தவகையில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரையிலான இரண்டு மாத காலத்தில் 1,910 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 

இதுவே கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 1,510 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இருந் தது. நடப்பாண்டில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள் ளது. மேலும் முன்பு காற்றாலை உற்பத்தியாளர்களிடம் இருந்து முழுவதுமாக மின் சாரம் கொள்முதல் செய்யப் படுவது இல்லை. இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

ஆனால் நடப்பாண்டில் நிலக்கரி தட்டுப்பாடு காரண மாக பல்வேறு மாநிலங்களில் மின்விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது.  அப்போது அனைத்து மாநிலங்களும் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. இதுபோல் தமிழக அரசும் ஒருபுறம் மின்உற்பத்தியை அதி கரிக்க நடவடிக்கை எடுத்து வந்தது. மேலும் காற்றாலை களில் இருந்து உற்பத்தியாகும் மின் சாரத்தை முழுவதுமாக வாங்கி பயன்படுத்தியது. தனக்கு தேவையானது போக மீதம் உள்ளதை மின்பரிமாற்றத் தின் மூலமாக விற்பனை செய்துள் ளது. இதனால் காற்றாலை உற்பத்தியாளர் களுக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment