“அரசுப் பணத்தில் ராணுவப் பயிற்சி அளித்து இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ப்பதே மறைமுக நோக்கம்” : புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 28, 2022

“அரசுப் பணத்தில் ராணுவப் பயிற்சி அளித்து இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ப்பதே மறைமுக நோக்கம்” : புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி, ஜூன் 28 அரசுப் பணத்தில் ராணுவப் பயிற்சி அளித்து, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இளைஞர்களை கொண்டு வருவதே ஒன்றிய பாஜக அரசின் மறைமுக நோக்கமாக உள்ளது என்று புதுச்சேரி மாநில மேனாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய பாஜக அரசின் அக்னி பாதை திட்டத்தை கண்டித்து   போராட்டம்  16 இடங்களில் நடந்தது.  

போராட்டத்தில் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்ட மேனாள் முதலமைச்சர் வி.நாராயணசாமி பேசிய தாவது: "கடந்த காலங்களில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று முப்படைக்கும் வீரர்களை தேர்வு செய் வார்கள். தற்போது ஆண் டுக்கு 47 ஆயிரம் ராணுவ வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 6 மாத பயிற் சியும், மூன்றரை ஆண்டுகள் பணியும் வழங்கப்படும். அதன் பிறகு அவர்கள் வீட்டிற்கு அனுப்பும் அக்னி பத் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் நாட்டில் வேலையில்லாத நிலை ஏற்படும். இத்திட்டத்தை எதிர்த்து வட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

அரசு பணத்தில் ராணுவப் பயிற்சி அளித்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இளைஞர்களை கொண்டு வருவதே ஒன்றிய பாஜக அரசின் மறைமுக நோக்கமாக உள்ளது. இத்திட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார்.  


No comments:

Post a Comment