ஆட்சியைக் கவிழ்ப்பது, கட்சிகளை உடைப்பதே பாஜகவின் வேலை : இரா. முத்தரசன் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 28, 2022

ஆட்சியைக் கவிழ்ப்பது, கட்சிகளை உடைப்பதே பாஜகவின் வேலை : இரா. முத்தரசன் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை, ஜூன் 28  மக்களை மறந்து ஆட்சிகளைக் கவிழ்ப்பது, கட்சிகளை உடைக்கும் வேலைகளை பாஜகவினர் செய்து வருகின்றனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் மாவட்ட மாநாடு நேற்று தொடங்கியது. அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே கட்சியின் மாவட்ட செயலாளர் மு.மாதவன் தலைமையில் நேற்று (ஜூன் 27) இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், "மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்ற பொறுப்புகளுக்கு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் யாரும் இடதுசாரி கட்சிகளுக்கு வருவதில்லை. மாறாக, சமூகத்தை மாற்றவும், ஏழை எளிய குடும்பத்தினரின் வாழ்க்கையை பாது காக்கவுமே இணைகின்றனர்.

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் உட்பட நாடு முழுவதும் எல்லா வற்றிலும் ஒரே முறையே இருக்க வேண் டும் என்று கூறி வருகிறது. நாட்டில் ஏழை, பணக்காரன், வீடின்றி நடை பாதையில் குடும்பம் நடத்துவோர், மாட மாளிகையில் வாழ்வோர் என்ற இருவேறு வாழ்க்கை முறை இந்தியாவில் உள்ளது. இதை மாற்றிவிட்டு ஒரே நாடு, ஒரே வாழ்க்கை முறையை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுக் கிறோம். இதை செய்வதற்கு ஒன்றிய அரசு தயாராக உள்ளதா?.

ஒன்றிய அரசு பொறுப்பேற்ற பிறகு 16 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ஆனால், 2 முறை மட்டுமே விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்கிறது. இந்தியாவை ஆள்வது நாட்டில் வசிக்கும் கோடிக் கணக்கான மக்களுக்கான ஆட்சி இல்லை. குறிப்பிட்ட சில நபர்களுக்கான ஆட்சிதான் நடக்கிறது. இந்தியாவில் பாஜக ஆட்சி காலத்தில் யாரும் அச்சமின்றி வாழ முடியவில்லை.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொரு ளாதார நெருக்கடிதான் இந்தியாவிலும் வரும். அந்த நாட்டில் ஏற்பட்ட போராட்டத்தைப் போன்று நம் நாட்டில் ஏற்பட்டால் என்ன செய்வது. ஏற்கெனவே, வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஒன்றேகால் ஆண்டு டில்லியில் போராட்டம் நடந் ததை மறந்துவிட முடியாது.

தமிழ்நாட்டில் ஓபிஎஸ், இபிஎஸ் ஸூக்குமான சண்டையை கிளப்பி பிளவுபடுத்த பாஜக திட்டமிடுகிறது. மக்களை மறந்து ஆட்சியை கவிழ்ப்பது, கட்சியை உடைப்பது போன்ற வேலையை பாஜகவினர் செய்துவருகி ன்றனர் என்று தெரிவித்துள்ளார்.  


No comments:

Post a Comment