புதுடில்லி, ஜூன் 7 ‘பாஜக வின் மோசமான மதவெறி யானது உலகளவில் இந்தி யாவின் நிலைபாட்டை சேதப் படுத்தியுள்ளது’ என காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
சவுதி அரேபியா, குவைத், ஈரான் உட்பட பல்வேறு நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இது தொடர் பாக காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில்,
‘உள்நாட்டில் பிளவுபடுத்தப் பட்ட இந்தியா, உலகளவில் பலவீனமாகி வருகின்றது. பாஜவின் வெட்கக்கேடான மதவெறியானது நம்மை மட்டும் தனிமைப்படுத்தவில்லை, உலக அளவில் இந்தியாவின் நிலைப்பாட்டை சேதப்படுத்தியுள் ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ராகுல் காந்தி மற்றொரு பதிவில், நாட்டின் பொருளாதார மந்த நிலை தொடர்பாகவும் ஒன்றிய அரசை சாடியுள்ளார். அந்தப் பதிவில், ‘இந்திய குடும்பங்கள் பணவீக்கம் மற்றும் வேலைஇழப்பின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு இருந்ததை காட்டிலும் தனிநபர் வருமானம் குறைந்துள்ளது. தனிநபர் வருமானமானதுரூ.94,270ல் இருந்துரூ.91,481 ஆக குறைந் துள்ளது. இந்தியாவின் மந்த நிலை உச்சரிக்கப்பட்டு வருகின்றது. பாஜ அரசானது கொள்கை திவால் நிலையில் தவித்து வருகின்றது. அதனிடம் பொருளாதார மந்தநிலை குறித்த எந்த பதிலும் இல்லை. இனி வரும் நாட்களில் பொருளாதார நிலை மேலும் மோசமாகக்கூடும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment