சென்னை, ஜூன் 4 தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பு:
சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்று அனுபவமிக்க பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும் இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன், பிஎஸ்சி சுவாச சிகிச்சையாளர் தேர்ச்சி பெற்ற அனுபவமிக்க ஆண்/பெண் தேவைப்படுகிறார்கள். இந்த பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச் சீட்டு, ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்ப வரால் வழங்கப்படும்.இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணி
காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.com- இல் கண்டு பயனடையலாம்.
மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (95662 39685), (044-22505886/ 22502267). இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்ப படிவம், தகுதி சான்றிதழ், அனுபவம் சான்றிதழ், கடவுச்சீட்டு மற்றும் ஒளிப்படம் ஆகியவற்றை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment